/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/பள்ளி நேரத்தில் கூடுதல் பஸ் இயக்க கோரிக்கைபள்ளி நேரத்தில் கூடுதல் பஸ் இயக்க கோரிக்கை
பள்ளி நேரத்தில் கூடுதல் பஸ் இயக்க கோரிக்கை
பள்ளி நேரத்தில் கூடுதல் பஸ் இயக்க கோரிக்கை
பள்ளி நேரத்தில் கூடுதல் பஸ் இயக்க கோரிக்கை
ADDED : செப் 23, 2011 09:59 PM
மடத்துக்குளம் : பள்ளி நேரத்தில் கணியூரிலிருந்து காரத்தொழுவு வழியாக
உடுமலைக்கு செல்லும் பஸ் போக்குவரத்தை அதிகப்படுத்த வேண்டும் என பொதுமக்கள்
கோரிக்கை வைத்துள்ளனர்.
மடத்துக்குளம் அருகே கணியூர் ,காரத்தொழுவில் அரசு
மற்றும் தனியார் பள்ளிகள் செயல்படுகின்றன. உடுமலை வழித்தடத்தில் உள்ள
தாந்தோனி, துங்காவி, பாறையூர், தாமரைப்பாடி ஊர்களைச் சேர்ந்த
ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த பள்ளிகளில் படித்து வருகின்றனர்.
காலையிலும் மாலையிலும் இவர்கள் உடுமலையில் இருந்து கடத்தூர், கணியூருக்கு
செல்லும் அரசுபஸ்களை பயன்படுத்தி வருகின்றனர். கணியூரில் இருந்து
காரத்தொழுவு வழியாக மாலை 3.30 மணிக்கு அடுத்து 4.45க்கு தான் பஸ்
உள்ளது.இதனால் மாலை நேரத்தில் பள்ளி மாணவர்கள் அனைவரும் ஒரே பஸ்சில்
நெருக்கடியில் பயணிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. பெற்றோர் கூறியதாவது: இதே
நிலை பல ஆண்டுகளாக உள்ளது.பல முறை கோரிக்கை வைத்தும் பயன் இல்லை. மாலையில்
பள்ளி நேரத்திலாவது கூடுதல் பஸ் இயக்கினால் மாணவர்களுக்கு சிரமம்
குறையும். இதற்கு போக்குவரத்து கழகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்
என்றனர்.