ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் போனஸ்
ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் போனஸ்
ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் போனஸ்
ADDED : செப் 30, 2011 03:07 PM
புதுடில்லி: கெஜட்டட் அந்தஸ்து இல்லாத 12.6 லட்சம் ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியத்தை போனசாக வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அம்பிகா சோனி கூறுகையில், ரயில்வே ஊழியர்களுக்கு உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகையாக (பி.எல்.பி.,) 78 நாள் ஊதியத்தை போனசாக வழங்க மத்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவித்தார். இதன் மூலம் சுமார் 12.6 லட்சம் ஊழியர்கள் பயன்பெறுவர் என்றும், அரசுக்கு ரூ. 1098.58 கோடி செலவாகும் என்றும் அம்பிகா சோனி தெரிவித்தார்.