/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/அங்கான்டஅள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழாஅங்கான்டஅள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா
அங்கான்டஅள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா
அங்கான்டஅள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா
அங்கான்டஅள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா
ADDED : ஜூலை 17, 2011 02:28 AM
தர்மபுரி: பாலக்கோடு அடுத்த கடமடை மற்றும் அங்கான்டஅள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா நடந்தது.கடமடையில் நடந்த விழாவுக்கு. பள்ளி தலைமையாசிரயிர் நடராஜன் தலைமை வகித்தார். கடமடை இயக்க நண்பர்கள் முத்துமணிக்கம், சுப்பிரமணி, சிவக்குமார், பிரபு, சாலி, மாதம்மாள், சுமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச நோட்டு, புத்தகங்கள் வழங்கப்பட்டன.* அங்கான்டஅள்ளியில் நடந்த விழாவுக்கு, முருகுன், விருதாச்சலம், ரத்தினவேல், குப்புராஜ், நந்தினி ஆகியோர் பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு குடிநீர் டிரம், எழுது பொருட்கள் மற்றும் இனிப்பு வழங்கினர். ஏற்பாடுகளை இந்திய புத்துயிர்ப்பு இயக்க பகுதி நேர ஒருங்கிணைப்பாளர் முருகேஸ்வரி செய்திருந்தார்.
* இண்டூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த கல்வி வளர்ச்சி நாள் விழாவில், காமராஜர் திருவுருவப்படத்துக்கு தலைமையாசிரியை பொற்செல்வி மாலை அணிவித்தார். உதவி தலைமையாசிரியர் தெரசாள், காமராஜர் சிறப்பு குறித்து பேசினார். இதையொட்டி நடந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.* சாமிசெட்டிப்பட்டி அரசு நடுநிலைப்பள்ளியில் நடந்த கல்வி வளர்ச்சி நாள் விழாவுக்கு, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வெங்கடேசன் தலைமை வகித்தார். தலைமையாசிரியர் சந்திரா வரவேற்றார். காமராஜர் திருவுருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.இதையொட்டி, மாணவ, மாணவிகளுக்கு இனிப்புகளும், நோட்டு, புத்தகங்களும் வழங்கப்பட்டது. தமிழ்நாடு காங்கிரஸ் தொழிலாளர் யூனியன் மாவட்ட தலைவர் சரவணகுமார், பஞ்சாயத்து தலைவர் ரங்கநாதின், தம்பி முனுசாமி, சாமராஜ், பவுனேஷன், துரை, பழனி, மணி, அந்தோணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.