Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/பஸ் கண்ணாடி உடைப்பு வழக்கு 13 பேருக்கு நிபந்தனை ஜாமீன்

பஸ் கண்ணாடி உடைப்பு வழக்கு 13 பேருக்கு நிபந்தனை ஜாமீன்

பஸ் கண்ணாடி உடைப்பு வழக்கு 13 பேருக்கு நிபந்தனை ஜாமீன்

பஸ் கண்ணாடி உடைப்பு வழக்கு 13 பேருக்கு நிபந்தனை ஜாமீன்

ADDED : ஆக 09, 2011 01:58 AM


Google News
சேலம்: நில அபகரிப்பு தொடர்பான வழக்கில், முன்னாள் தி.மு.க., அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் கைது செய்யப்பட்ட போது, தி.மு.க., வை சேர்ந்தவர்கள், சேலம் மாநகரின் பல இடங்களில் பஸ் கண்ணாடிகளை உடைத்து நொறுக்கினர்.சேலம் மாநகரில் பொது சொத்துக்கு சேதம் விளைவித்தது தொடர்பாக, 20க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சேலம் கருங்கல்பட்டியை சேர்ந்த முருகேசன்(39), முருகன்(38), கோரிமேட்டை சேர்ந்த பாலு(45), கொண்டலாம்பட்டியை சேர்ந்த நல்லதம்பி(40) ஆகியோர் முன் ஜாமீன் கேட்டு, சேலம் மாவட்ட நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிபதி பாஸ்கரன், 'அனைவரும் இரண்டு வாரம் நாமக்கல்லில் தங்கி, ஜே.எம்., நீதிமன்றம் எண் 1ல், காலை 10 மணிக்கும், மாலை 5 மணிக்கும் ஆஜராகி கையெழுத்து போட வேண்டும்' என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கினார்.

இதே வழக்கில், சேலம் கோர்ட்ரோட்டை சேர்ந்த பசுபதி(25), அஸ்தம்பட்டியை சேர்ந்த தீபக்(25), அம்மாப்பேட்டையை சேர்ந்த காளியப்பன்(35), அரூரை சேர்ந்த கணேசன்(37) கன்னங்குறிச்சியை சேர்ந்த ராஜேந்திரன்(40), குபேந்திரன்(32), தாதகாப்பட்டியை சேர்ந்த தாதை மோகன்(37), அமானி கொண்டலாம்பட்டியை சேர்ந்த புஷ்பராஜ்(38), குகையை சேர்ந்த கிருஷ்ணன்(47) ஆகியோர், ஈரோட்டில் இரண்டு வாரம் தங்கியிருந்து, ஈரோடு நீதிமன்றத்தில் காலை 10 மணிக்கும், மாலை 5 மணிக்கும் ஆஜராகி கையெழுத்து போட வேண்டும், என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கப்பட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us