/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/மயிலம் ஒன்றியத்தில் 321 பேர் மனு தாக்கல்மயிலம் ஒன்றியத்தில் 321 பேர் மனு தாக்கல்
மயிலம் ஒன்றியத்தில் 321 பேர் மனு தாக்கல்
மயிலம் ஒன்றியத்தில் 321 பேர் மனு தாக்கல்
மயிலம் ஒன்றியத்தில் 321 பேர் மனு தாக்கல்
ADDED : செப் 26, 2011 10:41 PM
மயிலம் : மயிலம் ஒன்றியத்தில் உள்ளாட்சி தேர்தலில் நேற்று 321 வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்தனர்.
மயிலம் ஒன்றியத்தில் 47 ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் 21 ஒன்றியக் கவுன்சிலர் பதவிகளுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 22ம் தேதி துவங்கியது. நேற்று அரசியல் கட்சி வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்தனர். நேற்று மாலை 3 மணி வரை ஊராட்சிமன்ற தலைவர் பதவிக்கு 60 வேட்பாளர்களும், ஒன்றியக் கவுன்சிலர் பதவிக்கு தி.மு.க.,- அ.தி.மு.க.,- பா.ம.க.,- காங்., -தே.மு.தி.க., மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் உட்பட 29 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு 3 பேரும், கிராம பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிக்கு 287 பேரும் மனுதாக்கல் செய்தனர்.