/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/ஆன்மீக இறைவழிபாடு மன நிறைவை தரும் நெல்லையில் செங்கோல் ஆதீனம் ஆசியுரைஆன்மீக இறைவழிபாடு மன நிறைவை தரும் நெல்லையில் செங்கோல் ஆதீனம் ஆசியுரை
ஆன்மீக இறைவழிபாடு மன நிறைவை தரும் நெல்லையில் செங்கோல் ஆதீனம் ஆசியுரை
ஆன்மீக இறைவழிபாடு மன நிறைவை தரும் நெல்லையில் செங்கோல் ஆதீனம் ஆசியுரை
ஆன்மீக இறைவழிபாடு மன நிறைவை தரும் நெல்லையில் செங்கோல் ஆதீனம் ஆசியுரை
ADDED : ஜூலை 21, 2011 02:25 AM
திருநெல்வேலி : ஆன்மிக இறைவழிபாடு மனநிறைவை கொடுத்து நல்வாழ்வு அளிக்கும் என நெல்லை சங்கீதசபாவில் செங்கோல் மடம் ஆதீனம் பேசினார்.
நெல்லை சங்கீத சபாவில் ஜூலை மாத ஆன்மிக நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் சைவ சமயத்தின் பெருமைகள், இந்து சமயத்தின் சிறப்புக்கள், சிவபெருமானின் பெருமைகள் குறித்து திருக்கயிலாய பரம்பரை செங்கோல் மடம் ஆதீனம் 102வது குருமகா சன்னிதானம் கல்யாண சுந்தர சத்தியஞான பண்டார சந்நிதி சுவாமிகள் கடந்த 2 நாட்களாக உபன்யாசம் நிகழ்த்தினார்.
நிகழ்ச்சியில் கல்யாண சுந்தர சத்தியஞான பண்டார சந்நிதி சுவாமிகள் பேசியதாவது: ஆன்மிக இறைவழிபாடு மனநிறைவு கொடுத்து நல்வாழ்வு அளிக்கும். சமயம், மதங்கள் எல்லாம் கடவுள் அல்ல. மனிதன் திருந்துவதற்கே சமயம். சமயங்கள் இறைவனுடைய திருவுருவங்களின் தத்துவங்களை கூறி இறைவனின் பேரருளை பெருவதற்கான வழி. சிவபெருமான், விநாயகர், சுப்பிரமணியர் சிறப்புக்கள் குறித்தும், ஆலய வழிபாடு, திருமுறை, சிந்தாந்தம் சார்ந்த கருத்துக்களுக்கு விளக்கம் அளித்தார். சங்கீத சபா செயலாளர் நடேசன், இணைச் செயலாளர் தளவாய் ராமசாமி, சிவனுப்பிள்ளை, ஈஸ்வரன்பிள்ளை உட்பட பலர் கலந்து கொண்டனர்.


