ADDED : ஜூலை 14, 2011 09:35 PM
ஆனைமலை : ஆனைமலை அடுத்த காளியாபுரம் பழனியம்மாள் மேல் நிலைப்பள்ளி சாரணர்
இயக்க மாணவர்களின் தூய்மை படுத்தும் முகாம் நடந்தது.
காளியாபுரம்
பழனியம்மாள் மேல்நிலைப்பள்ளி சாரண இயக்க மாணவர்கள் 30 பேர் வனச்சரக அலுவலர்
தங்கராஜ்பன்னீர்செல்வம் தலைமையில் உலாந்தி வனச்சரகத்தில் தூய்மை படுத்தும்
பணி நடந்தது. வன உயிரினங்களின் வசதிக்காக புல்வெளிகளில் இடையூராக
வளர்ந்துள்ள முட்செடிகள், தேவையில்லாத களைச்செடிகள் குப்பைகளை தூய்மை
படுத்தும் பணியை செய்தனர். முகாமை சிறப்பாக நடத்தி பள்ளி திரும்பிய
மாணவர்களை பள்ளி செயலர் சிவக்குமார், இணைச்செயலர் நரேந்திரகுமார் மற்றும்
தலைமை ஆசிரியர் வீரமணி, சாரண ஆசிரியர் பெரியசாமி ஆகியோர் பாராட்டினர்.


