ADDED : செப் 10, 2011 01:25 AM
எழுமலை : மதுரை மாவட்டம் உத்தப்புரத்தில் பிளக்ஸ் போர்டு வைப்பதில் இரு பிரிவினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில், 42 பேரை போலீசார் கைது செய்தனர்.
இங்கு, பிளக்ஸ் போர்டு வைப்பதில் இரு பிரிவினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது.
இரு பிரிவினரும் மாறி, மாறி கற்கள் வீசி தாக்கியதில் மூன்று பேர் காயமடைந்தனர். உசிலம்பட்டி டி.எஸ்.பி., குமார், எழுமலை இன்ஸ்பெக்டர் தினகரன், எஸ்.ஐ., பாஸ்கரன் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர். மதுரை எஸ்.பி., ஆஸ்ரா கர்க் சம்பவ இடத்தில் விசாரணை செய்தார்.உசிலம்பட்டி ஆர்.டி.ஓ., புகழேந்தி, பேரையூர் தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி மற்றும் வருவாய்த் துறையினர் உத்தப்புரத்தில் முகாமிட்டுள்ளனர்.கலவரத்தில் ஈடுபட்ட இரு பிரிவினரைச் சேர்ந்த 25 பெண்கள் உட்பட 42 பேரை போலீசார் கைது செய்தனர். உத்தப்புரத்தில் தற்போது ஆண்கள் யாரும் இல்லை. கைது நடவடிக்கைக்கு பயந்து இரு பிரிவையும் சேர்ந்த ஆண்கள் தலைமறைவாகி விட்டனர்.