கடத்தபட்ட ஏலக்காய் போலீசார் பறிமுதல்
கடத்தபட்ட ஏலக்காய் போலீசார் பறிமுதல்
கடத்தபட்ட ஏலக்காய் போலீசார் பறிமுதல்
ADDED : செப் 08, 2011 10:46 PM
கூடலூர் : கேரளாவில் இருந்து காரில் கடத்தி வரப்பட்ட ஏலக்காயை, கூடலூர் போலீசார் பறிமுதல் செய்தனர்.
கூடலூரில் சப்-இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் தலைமையில், போலீசார் இரவு ரோந்து சென்றனர். அப்போது குமுளியில் இருந்து தேவாரம் நோக்கி, டாடா சுமோ கார் வேகமாக வந்தது. அதை நிறுத்தி சோதனை செய்தனர். காரில் முறையான ஆவணங்கள் இன்றி 14 மூடைகளில் 350 கிலோ ஏலக்காய் இருந்தது. அதனை பறிமுதல் செய்து, லோயர்கேம்ப் வணிகவரித்துறை செக்போஸ்ட் அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். ஏலக்காய் கடத்தி வந்ததற்காக, ஏலக்காய் உரிமையாளர் ராபிக்கு 30 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. தமிழக எல்லையான குமுளியில் இருந்து லோயர்கேம்ப் வரை போலீஸ், வனத்துறை, வருவாய்த்துறை, வணிகவரித்துறை, போக்குவரத்து துறை ஆகிய ஐந்து செக்போஸ்ட்டுகள் உள்ளன. இவற்றில் சோதனைக்கு உட்படுத்தாமல் கடத்தி வரப்பட்டுள்ளது. அனைத்து செக்போஸ்ட்களிலும் ஏலக்காய் வியாபாரிகள் அவ்வப்போது கவனித்து விடுவதால் கடத்தலை கண்டு கொள்வதில்லை.