/உள்ளூர் செய்திகள்/தேனி/சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் : மக்கள் குறை கேட்பேன் : காங்., வேட்பாளர் தஸ்லீம் உறுதிசுத்திகரிக்கப்பட்ட குடிநீர் : மக்கள் குறை கேட்பேன் : காங்., வேட்பாளர் தஸ்லீம் உறுதி
சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் : மக்கள் குறை கேட்பேன் : காங்., வேட்பாளர் தஸ்லீம் உறுதி
சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் : மக்கள் குறை கேட்பேன் : காங்., வேட்பாளர் தஸ்லீம் உறுதி
சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் : மக்கள் குறை கேட்பேன் : காங்., வேட்பாளர் தஸ்லீம் உறுதி
தேனி : தேனி மக்களின் குறைகளை வாரம் ஒருமுறை கேட்டு தீர்ப்பேன், அனைத்து மக்களுக்கும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பேன் என காங்., வேட்பாளர் தஸ்லீம் கூறினார்.
58 லட்சம் ரூபாய் செலவில் நடந்த எரிவாயு தகனமேடை பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. தேனியில் சென்டர் மீடியம் அமைக்க 2 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அவரது வழிகாட்டுதல்படி நகராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறேன். 85 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும் குடிநீர் திட்டத்தில் நீரை நல்ல முறையில் சுத்திகரித்து மினரல் வாட்டர் தரத்தில் அனைவருக்கும் தரமான குடிநீர் வழங்குவேன். பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு அதிகளவு நல்ல தரமான வாழ்க்கை அமையும் வகையில் திட்டங்களை செயல்படுத்துவேன். அராஜகம் இல்லாமல் பொதுமக்கள் எளிதில் அணுகும் வகையில் எளிய முறையில் நடந்து கொள்வேன். மக்களுக்கு நல்ல முறையில் பணியாற்றுவேன். பாதாள சாக்கடை பணிகளை முடிந்ததும் நகர் முழுவதும் சிறப்பாக ரோடு அமைத்து கொடுப்பேன். வீரப்ப அய்யனார் கோயிலுக்கு ரோடு, பாலம் போக்குவரத்து வசதி செய்வேன். வாரம் ஒருமுறை மக்கள் குறை கேட்பேன்,' என்றார்.