தனியார் பள்ளி நிரந்தர ஆவணங்கள் சேகரிப்பு : மெட்ரிக் ஆய்வாளர் வசம் ஒப்படைப்பு
தனியார் பள்ளி நிரந்தர ஆவணங்கள் சேகரிப்பு : மெட்ரிக் ஆய்வாளர் வசம் ஒப்படைப்பு
தனியார் பள்ளி நிரந்தர ஆவணங்கள் சேகரிப்பு : மெட்ரிக் ஆய்வாளர் வசம் ஒப்படைப்பு
மாநிலம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளின் நிரந்தர ஆவணங்களை, மாவட்டம் வாரியாக புத்தகமாக்கி, அதை மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் வசம் வைக்க வேண்டும் என, மெட்ரிக் பள்ளி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
மெட்ரிக் பள்ளிகளில் போதுமான காற்றோட்டம், இடவசதி உள்ளிட்டவை இருந்தால் மட்டுமே அங்கீகாரம் தர வேண்டும். பிரைமரி, நர்சரி பள்ளிகளில் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை, அதிகாரிகள் ஆய்வு செய்து, அங்கீகாரத்தை புதுப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. பிரைமரி, நர்சரி பள்ளிகளை ஆய்வு செய்து அங்கீகாரம் தரும் பணியை, முதன்மை கல்வி அலுவலருக்கு ஒதுக்கி, அரசு உத்தரவிட்டது.
தமிழகத்தில், 66 கல்வி மாவட்டங்கள் உள்ளன. இவற்றை ஒருங்கிணைத்து, 15 மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்கள் உள்ளனர். இவர்கள் மூலம், தனியார் பள்ளிகளின் அடிப்படை வசதிகள் மற்றும் இதர விவரங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு பள்ளிக்கு அங்கீகாரம் வழங்கப்படுகிறது. பள்ளிகளின் அங்கீகாரம் பற்றிய விவரம் அறிய, பள்ளிக்கல்வித் துறை மூலம், tணட்ச்tணூடிஞி.ஞிணிட் என்ற இணையதளம் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.
மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளின் அங்கீகாரம் குறித்த நிரந்தர ஆவணங்கள் அடங்கிய புத்தகம் தயாரிக்க, மெட்ரிக் பள்ளி இயக்குனரகம் உத்தரவிட்டது. அந்த புத்தகத்தில் பள்ளிப் பத்திரம், நிலங்களுக்கான குத்தகைப் பத்திரம் மற்றும் நில ஆவணங்கள், எப்.எம்.பி., (நில வரைபடம்), நிலப்பத்திரம், கட்டட வரைபடம், பள்ளி புகைப்படம், லைசென்ஸ், கட்டட உறுதிச் சான்று, சுகாதாரச் சான்று, தீயணைப்புச் சான்று ஆகியவற்றின் நகல் இடம்பெற்றிருக்கும். மாவட்டம் வாரியாக பெறப்பட்ட புத்தகங்கள், மாவட்டம் வாரியாக வெவ்வேறு நிறங்களில், 'பைண்டிங்' செய்யப்பட்டுள்ளன.
- நமது சிறப்பு நிருபர் -