ADDED : ஆக 11, 2011 11:14 PM
பல்லடம் : பல்லடம் போலீஸ் ஸ்டேஷனுக்கு கடந்த மூன்று வாரங்களாக பல்வேறு மொபைல் எண்களில் இருந்து அடிக்கடி அனாமத்து அழைப்புகள் வருகின்றன.
குறிப்பாக, அதிகாலை மற்றும் நள்ளிரவு நேரங்களில் அனாமத்து அழைப்புகள் வருகின்றன. பேசும் மர்ம ஆசாமிகள், ஸ்டேஷனில் பணியாற்றும் இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ., மற்றும் ஏட்டுக்களை மிகவும் தரக்குறைவாக ஆபாச வார்த்தைகளில் அர்ச்சனை செய்வதுடன், முடிந்தால் எங்கள் முகவரியை கண்டுபிடித்து பாருங்கள் என சவால் விடுத்தும் பேசுகின்றனர். இதனால் டென்ஷன் ஆகியுள்ள, பல்லடம் போலீசார், அழைப்பு வந்த மொபைல் எண்கள் தொடர்பாக சம்பந்தப்பட்ட மொபைல் நிறுவனங்களிடம் விசாரித்து வருகின்றனர். மர்ம ஆசாமிகள் சிக்கினால், 'லாடம்' கட்ட முடிவு செய்துள்ளனர்.