Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில மாநாடு நெல்லையில் 12ம் தேதி முதல் ஆரம்பம்

தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில மாநாடு நெல்லையில் 12ம் தேதி முதல் ஆரம்பம்

தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில மாநாடு நெல்லையில் 12ம் தேதி முதல் ஆரம்பம்

தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில மாநாடு நெல்லையில் 12ம் தேதி முதல் ஆரம்பம்

ADDED : ஜூலை 21, 2011 02:24 AM


Google News

திருநெல்வேலி : தமிழ்நாடு அறிவியல் இயக்க 16வது மாநில மாநாடு நெல்லையில் வரும் 12ம் தேதி முதல் ஆரம்பமாகிறது.

இதனையொட்டி பல்வேறு கருத்தரங்குகள், விவாதங்கள் நடத்தப்படுகிறது.



இதுகுறித்து தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் கணபதி நிருபர்களிடம் கூறியதாவது: தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் 16வது மாநில மாநாடு வரும் ஆகஸ்ட் மாதம் 12ம் தேதி முதல் 14ம் தேதி வரை நடக்கிறது. 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் இம்மாநாட்டில் தமிழகம் முழுவதும் 500 பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். 'வளங்களும் வளர்ச்சியும் மக்களுக்கே' என்பதை கருப்பொருளாக கொண்டு இம்மாநாடு நடக்கிறது. உயர் கல்வி மற்றும் நவீன அறிவியல் தொழில் நுட்பம், மக்கள் நல வாழ்வு, வன உரிமை சட்டமும், மலை வாழ் மக்களும், அறிவியல் பரப்புதலும் அறிவியல் மனப்பான்மை வளர்த்தல், அறிவியல் வளர்ச்சி - பிரச்னைகளும், சவால்களும், கல்வி சூழலும் ஆசிரியரும், விவசாயமும் எதிர்கொள்ளும் பிரச்னைகளும், சுய உதவி குழுக்கள் இன்றைய நிலை ஆகிய தலைப்புகளில் கருத்தரங்குகளும் நடக்கிறது.



இதில் டில்லி விஞ்ஞானிகள் வெங்கடேஸ்வரன், சுந்தரராமன், சென்னை டாக்டர்கள் ஆத்ரேயா, ராமானுஜம், இந்துமதி, கல்பனா, திரைப்பட இயக்குனர் பாரதி கிருஷ்ணகுமார், தமிழ்நாடு அறிவியல் இயக்க தலைவர் கிருஷ்ணசாமி, தமிழ்நாடு பொதுப் பள்ளி கல்விக்கான மாநில மேடை பொது செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு உட்டபட பலர் கலந்து கொள்கின்றனர். மாநாட்டில் கல்வி, சுகாதாரம், வளர்ச்சி, சுற்றுசூழல், அறிவியல் தொழில் நுட்பம், சுய உதவி குழுக்கள் ஆகிய தலைப்புகளில் கொள்கை பிரகடன நூல், 25 தலைப்புகளில் அறிவியல் நூல்களும் வெளியிடப்படுகிறது.



கருத்தரங்கம், கலை நிகழ்ச்சிகள், புத்தக கண்காடசி, விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடல், ஆவணப் படம் திரையிடல், தீர்மானங்கள் நிறைவேற்றுதல், புதிய நிர்வாகிகள் தேர்வு போன்ற நிகழ்ச்சிகள் நடக்கிறது. சமச்சீர் கல்வி, கல்வி உரிமை சட்டம் மற்றும் கல்வி கொள்கைகள் குறித்து விவாதங்களும் நடக்கிறது. இவ்வாறு மாவட்ட செயலாளர் கூறினார். பேட்டியின் போது மாநில பொது செயலாளர் பாலகிருஷ்ணன், மாநாட்டு பொறுப்பாளர் ராஜமாணிக்கம், துளிர் இல்ல ஒருங்கிணைப்பாளர் கணேசன், பொருளாளர் வரகுணன், கருத்தாளர் பால்ராஜ் ஆகியோரும் உடனிருந்தனர்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us