ADDED : ஜூலை 14, 2011 09:45 PM
அவிநாசி : திருப்பூர் டாலர் சிட்டி நிர்வாகிகள் பதவியேற்பு விழா, பழங்கரை
ஐ.கே.எப்., ஹாலில் நடந்தது.
கிளப் தலைவர் விஜயகுமார், புதிய தலைவர்
வசந்தகுமாருக்கு பட்டயத்தை அணிவித்தார். செயலாளர் அருணாசலம் வரவேற்றார்.
திருச்சி மத்திய ரோட்டரி கிளப் நிர்வாகி வள்ளியப்பன் திருநாவுக்கரசு
சிறப்புரை ஆற்றினார். மண்டல ஒருங்கிணைப்பாளர் சந்திரலேகா, துணை கவர்னர்
சிதம்பரம் உட்பட பலர் பேசினர். வேலம்பாளையம் அரசு துவக்கப்பள்ளிக்கு மேஜை,
குழந்தைகளுக்கான கல்வி 'சிடி', கல்லூரி மாணவி நித்யாவுக்கு ரூ.10 ஆயிரம்
கல்வி ஊக்கத்தொகை, துவக்கப்பள்ளி மாணவர்களுக்கு நோட்டு வழங்கப்பட்டன.புதிய
செயலாளர் ராமகிருஷ்ணன் நன்றி கூறினார்


