ADDED : செப் 18, 2011 10:26 PM
செஞ்சி:செஞ்சி தாலுகாவில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட பா.ஜ.,வினரிடம்
இருந்து விருப்ப மனுக்கள் பெறப்பட்டன.செஞ்சி, மேல்மலையனூர், வல்லம்
ஒன்றியங்கள், செஞ்சி, அனந்தபுரம் பேரூராட்சியில் உள்ளாட்சி தேர்தலில்
பா.ஜ., சார்பில் போட்டியிட விருப்ப மனுக்கள் பெறப்பட்டன.
செஞ்சி ஏ.என்.ஏ.,
மினி ஹாலில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் மனுக்களை
பெற்றார்.செஞ்சி பேரூராட்சி தலைவர் பதவிக்கு ஒன்றிய பொது செயலாளர்
சந்திரசேகர் மனு கொடுத்தார். இதே போல் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கும்
மனுக்கள் கொடுத்தனர்.இதில் நிர்வாகிகள் கஜேந்திரன், திருமூர்த்தி,
சந்திரபாபு, கிருஷ்ணமூர்த்தி, ராதாகிருஷ்ணன், குலசேகரன் உடனிருந்தனர்.