ADDED : செப் 12, 2011 03:45 AM
நாமக்கல்: நாமக்கல் அடுத்த வேலகவுண்டம்பட்டி கொங்குநாடு மெட்ரிக்
மேல்நிலைப்பள்ளியில், ஓணம் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது.ஆவணி
மாதத்தின் அஸ்தம் நட்சத்திரம் அன்று சாஸ்திர முறைப்படி தட்டு அத்தம் என்ற
கோலம் மண்ணால் செதுக்கப்பட்டு, 10 நாட்களும் புதுப்புது மலர்களால்
அலங்கரிக்கப்பட்டது.
அதை தொடர்ந்து, திருவோணம் அன்று பாரம்பரிய முறைப்படி
காய்கறி மற்றும் தாமரை உள்ளிட்ட உயர் ரக மலர்களை கொண்டு அத்தப்பூ என்ற
கோலம் வரையப்பட்டு மலையாள மொழி இறைவணக்கப் பாடலோடு விழா துவங்கியது.இந்திய
சூழலில், கலாச்சாரங்களின் ஒன்றிணைப்பின் அவசியம் குறித்து பள்ளி முதல்வர்
பிரேம்தாஸ் விளக்கி பேசினார். பள்ளி ஆலோசகர் ராஜன் வாழ்த்தி பேசினார்.
நிகழ்ச்சியில், பள்ளி நிர்வாகத்தினர், ஆசிரியர்கள், மாணவ, மாணவியர் உள்பட
பலர் பங்கேற்றனர்.