ஐ.நா.பொதுச்சபைக் கூட்டம்: நியூயார்க் சென்றார் பிரதமர்
ஐ.நா.பொதுச்சபைக் கூட்டம்: நியூயார்க் சென்றார் பிரதமர்
ஐ.நா.பொதுச்சபைக் கூட்டம்: நியூயார்க் சென்றார் பிரதமர்
ADDED : செப் 21, 2011 02:59 PM
புதுடில்லி: ஐ.நா.பொதுச்சபைக் கூட்டம் துவங்க இருப்பதையொட்டி கூட்டத்தில் கலந்து கொள்ள பிரதமர் மன்மோகன்சிங் 6 நாள் பயணமாக நியூயார்க் சென்றார்.
வரும் சனிக்கிழமை நடக்கும் பொதுச்சபைக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். ஐ.நா. பொதுச்சபையின் 66-வது கூட்டத்தில் பங்கேற்பதற்காக இந்திய பிரதமர் மன்மோகன்சிங் 6 நாள் பயணமாக நியூயார்க் புறப்பட்டு சென்றார்.. அவருடன் , வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, வெளியுறவு செயலர் ரஞ்சன்மாத்தாய், தேசியபாதுகாப்பு ஆலோசகர் ஷிவசங்கர்மேனன் உள்ளிட்ட உயர்மட்ட குழுவினர் சென்றனர்..ஐ.நா. பொதுச்சபையில் வரும் சனிக்கிழமை பிரதமர் மன்மோகன் உரையாற்றுகிறார். முன்னதாக பல்வேறு நாட்டு தலைவர்களை சந்தித்து பேசுகிறார்.அப்போது பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவிற்கு நிரந்தர உறுப்பினர் இடம் பெறுவது, பாலஸ்தீன பிரச்னை உள்ளிட்டவைகள் குறித்தும் பேசுகிறார்.