வேலூர் சிறையில் ஏ.டி.ஜி.பி., ஆய்வு
வேலூர் சிறையில் ஏ.டி.ஜி.பி., ஆய்வு
வேலூர் சிறையில் ஏ.டி.ஜி.பி., ஆய்வு
ADDED : ஆக 29, 2011 12:57 AM
வேலூர் : வேலூர் சிறையில் உள்ள தூக்கு மேடை மற்றும் தூக்கிலிடும் ஒத்திகை குறித்து, தமிழக சிறைத்துறை ஏ.டி.ஜி.பி., நேற்று திடீர் ஆய்வு செய்தார்.
தமிழக சிறைத்துறை ஏ.டி.ஜி.பி., டோக்ரா, நேற்று மதியம், 1. 30 மணிக்கு, வேலூர் மத்திய ஆண்கள் சிறைக்கு வந்தார். தூக்கு தண்டனைக் கைதிகள் மூவரையும், செப்., 9ம் தேதி தூக்கிலிடுவது குறித்து, சிறை கண்காணிப்பாளர் அறிவுடைநம்பி மற்றும் சிறை அதிகாரிகளிடம் ஒரு மணி நேரம் ஆலோசனை செய்தார்.
தொடர்ந்து, தூக்கு மேடை தூரம், தூக்கு போட பயன்படுத்தப்படும் மணிலா கயிறு ஆகியவற்றை ஆய்வு செய்தார். இருவரை தூக்கில் போடுவது போன்ற ஒத்திகையை பார்வையிட்டார். தூக்கு தண்டனை கைதிகள் முருகன், சாந்தன், பேரறிவாளன் அடைக்கப்பட்டிருந்த தனி செல்லை பார்வையிட்ட டோக்ரா, அங்குள்ள வசதிகள் குறித்து ஆய்வு செய்தார்.
கொலையாளிகள் மூவரின் மருத்துவ பரிசோதனை அறிக்கையை பார்வையிட்ட பின், மூவருக்கும் வழங்கப்படும் உணவின் தரத்தை ஆய்வு செய்தார். கொலையாளிகளை தூக்கில் போட, ஆறு வார்டன்களை தேர்வு செய்து, அவர்களுக்கு இன்று (ஆக., 29) சென்னையில் சிறப்பு பயிற்சி வழங்க உத்தரவிட்டார்.