கிராமங்களுக்கு அருகில் ஓட்டுச்சாவடி: தேர்தல் ஆணையம் உத்தரவு
கிராமங்களுக்கு அருகில் ஓட்டுச்சாவடி: தேர்தல் ஆணையம் உத்தரவு
கிராமங்களுக்கு அருகில் ஓட்டுச்சாவடி: தேர்தல் ஆணையம் உத்தரவு
UPDATED : ஆக 14, 2011 04:22 PM
ADDED : ஆக 14, 2011 04:21 PM
சிவகங்கை : ''உள்ளாட்சி தேர்தலில் ஓட்டுச்சாவடிகள் கிராமத்திற்கு அருகிலேயே அமைக்குமாறு,'' மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
அக்டோபரில் உள்ளாட்சி தேர்தல் நடக்கும் என, அரசு திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது. இதற்கான ஆயத்தப்பணிகள் மாவட்ட கலெக்டர்கள் தலைமையில் நடக்கிறது. மாவட்ட, ஒன்றிய, நகராட்சி, மாநகராட்சி, பேரூராட்சி வாரியாக தேர்தல் பிரிவு, அலுவலர்களை நியமித்து பணிகள் நடக்கிறது.
ஓட்டுச்சாவடி:தேர்தல் நடத்த தேவையான ஓட்டுச்சாவடிகள் போதிய வசதியுடன் இருக்கவேண்டும். வாக்காளர்கள் ஓட்டளிக்க வசதியாக கிராமத்தில் இருந்து 2 கி.மீ.,க்குள் ஓட்டுச்சாவடிகள் இருக்கவேண்டும். ஓட்டுச்சாவடிகள் தூரமாக இருப்பின், அவற்றை உடனே கிராமத்திற்கு அருகில் மாற்றவேண்டும். பாகம் எண், ஆண், பெண் விபரத்தை தெளிவாக எழுதவேண்டும். மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் சென்றுவர ஏதுவாக வசதிகள் செய்யுமாறு, மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
உள்ளாட்சி தேர்தல் அதிகாரி ஒருவர் கூறுகையில்,'' தேர்தல் அலுவலர்கள் ஓட்டுச்சாவடிக்கு செல்வதற்கான வரைபடம் உட்பட பல்வேறு நடவடிக்கைகளை பின்பற்ற தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதற்கான பணிகள் நடக்கிறது. இந்த முறை கிராம ஊராட்சியில் ஒரு வார்டு உறுப்பினருக்கான தேர்தல் என்பதால், ஓட்டு எண்ணும் பணி எளிதில் முடியும்,'' என்றார்.