/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/ரமலானையொட்டி இரவு கடைகளுக்கு அனுமதி முஸ்லிம்லீக் கலெக்டருக்கு வலியுறுத்தல்ரமலானையொட்டி இரவு கடைகளுக்கு அனுமதி முஸ்லிம்லீக் கலெக்டருக்கு வலியுறுத்தல்
ரமலானையொட்டி இரவு கடைகளுக்கு அனுமதி முஸ்லிம்லீக் கலெக்டருக்கு வலியுறுத்தல்
ரமலானையொட்டி இரவு கடைகளுக்கு அனுமதி முஸ்லிம்லீக் கலெக்டருக்கு வலியுறுத்தல்
ரமலானையொட்டி இரவு கடைகளுக்கு அனுமதி முஸ்லிம்லீக் கலெக்டருக்கு வலியுறுத்தல்
ADDED : ஆக 06, 2011 01:56 AM
திருநெல்வேலி : நெல்லை மாவட்டத்தில் ரமலான் பண்டிகையை முன்னிட்டு இரவு டீக்கடை, ஓட்டல்களை நடத்த அனுமதி வழங்க முஸ்லிம்லீக் வலியுறுத்தியது.இந்திய யூனியன் முஸ்லிம்லீக் மாவட்ட துணைத்தலைவர் திவான்முகைதீன் கலெக்டர், மாநகர போலீஸ் கமிஷனருக்கு அனுப்பிய மனு:நெல்லை மாவட்டத்தில் டீக்கடை, ஓட்டல்களை இரவு 12 மணிக்கு மூட வேண்டும் என்ற நடைமுறை உள்ளது.
முஸ்லிம்கள் அனுஷ்டிக்கும் ரம்ஜான் நோன்பு கடந்த 2ம்தேதி துவங்கியது. முஸ்லிம்கள் ஒரு மாதம் பகலில் நோன்பு இருந்து இரவு சாப்பிடுவர். பள்ளிவாசல்களில் சிறப்புத்தொழுகை இரவு 10 மணிக்கு துவங்கி 12 மணி வரை நடக்கும். நோன்பு விதிப்படி அதிகாலை 3 மணி முதல் 4.30 மணிக்குள் டிபன் அல்லது சாப்பாடு சாப்பிட்டுவிட்டு நோன்பு மேற்கொள்வர்.ஓட்டல்களை இரவு 12 மணிக்கு மூடுவதால் வெளியூர்கள் பயணிகள் நோன்பு அனுஷ்டிக்க சிரமப்படுகின்றனர். மாவட்டத்தில் முஸ்லிம்கள் அதிகம் வாழும் பகுதிகளில் இரவு ஓட்டல்கள், டீக்கடைகளை திறக்க கலெக்டர் அனுமதிக்க வேண்டும். காலை, மாலையில் சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும். நெல்லை மாநகராட்சியில் அதிகாலை 3 மணிக்கு சங்கு ஒலிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.