/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/கோடி ரூபாய் கொட்டிய பூங்கா மேய்ச்சல் நிலமாகுதுகோடி ரூபாய் கொட்டிய பூங்கா மேய்ச்சல் நிலமாகுது
கோடி ரூபாய் கொட்டிய பூங்கா மேய்ச்சல் நிலமாகுது
கோடி ரூபாய் கொட்டிய பூங்கா மேய்ச்சல் நிலமாகுது
கோடி ரூபாய் கொட்டிய பூங்கா மேய்ச்சல் நிலமாகுது
ADDED : ஜூலை 28, 2011 01:04 AM
ஊட்டி : படகு இல்ல வளாகத்தில் ஒரு கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட அலங்கார நடைபாதை பூங்கா, மேய்ச்சல் நிலமாக மாறி வருகிறது.
ஊட்டி தாவரவியல் பூங்காவுக்கு அடுத்தபடியாக படகு இல்லத்தில் அதிகளவில் சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இங்கு சுற்றுலா வளர்ச்சிக் கழகம், மலைப்பகுதி மேம்பாட்டு திட்டம் சார்பில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் நடந்து வருகின்றன. கடந்த ஆண்டு ஏரியின் மறு கரையில் ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் அலங்கார நடைபாதைகள் மற்றும் பூங்கா அமைக்கும் பணிகள் நடந்தன. இந்த பூங்காவுக்கு தரமான பாதுகாப்பு வேலிகள் அமைக்காத காரணத்தால், கால்நடைகள் அதிகளவில் புகுந்து, மேய்ச்சல் நிலமாக மாறி வருகிறது. இது ஒருபுறமிருக்க, பழைய படகு இல்லத்தின் கரையோரம் உள்ள பகுதிகள், குப்பைகளை தேக்கி வைக்கும் இடமாக மாறி வருகிறது. இங்கு அதிகாரிகள் நேரடியாக ஆய்வு செய்து, படகு இல்ல பகுதிகளை தூய்மையாக வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


