எம்.பி., வீட்டில் துப்பாக்கிச்சூடு: மூன்று பேர் பரிதாப பலி
எம்.பி., வீட்டில் துப்பாக்கிச்சூடு: மூன்று பேர் பரிதாப பலி
எம்.பி., வீட்டில் துப்பாக்கிச்சூடு: மூன்று பேர் பரிதாப பலி
ADDED : ஜூலை 20, 2011 08:27 PM
சப்ரா:பீகார் மாநிலம், மகராஜ்கன்ஞ் தொகுதி ராஷ்ரிடிய ஜனதா தள எம்.பி., வீட்டிற்கு வந்த, அடையாளம் தெரியாத மர்ம நபர்கள், வீட்டில் இருந்த மூன்று பேரை சுட்டுக் கொன்று விட்டு தப்பினர்.பீகார் மாநிலம், மகராஜ்கன்ஞ் தொகுதி ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி எம்.பி., உமாசங்கர் சிங்.
இவருக்கும், கட்சித் தலைமைக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதால், அதிருப்தி அணியில் உள்ளனர். இந்நிலையில், இவர் சாப்ரா நகரின் ராஜேந்திர சரோவர் பகுதியில், புதிதாக வீடு ஒன்றை வாங்கினார்.இந்த வீட்டில், அவரது ஆதரவாளர்கள் உட்பட பலர் தங்கியிருந்தனர். இந்த வீட்டிற்கு, ஜீப்களில் வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் 12 பேர், உமாசங்கர் சிங் வீட்டில் இருந்தவர்களை நோக்கி கண்மூடித்தனமாக சுட்டனர். இதில், மூன்று பேர் பலியாகினர். அப்போது, உமாசங்கர் சிங் வீட்டில் இல்லை.சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் தேவேந்திரசிங், மணி பூஷண் சிங் மற்றும் தினேஷ் ராஜ் என அடையாளம் கண்டனர். வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.