/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/அடடே; ரேஷன் கார்டில் காஸ் இணைப்பு விவரம் பதிவு: 36 ஆயிரம் லிட்டர் மண்ணெண்ணெய் மீதமானதுஅடடே; ரேஷன் கார்டில் காஸ் இணைப்பு விவரம் பதிவு: 36 ஆயிரம் லிட்டர் மண்ணெண்ணெய் மீதமானது
அடடே; ரேஷன் கார்டில் காஸ் இணைப்பு விவரம் பதிவு: 36 ஆயிரம் லிட்டர் மண்ணெண்ணெய் மீதமானது
அடடே; ரேஷன் கார்டில் காஸ் இணைப்பு விவரம் பதிவு: 36 ஆயிரம் லிட்டர் மண்ணெண்ணெய் மீதமானது
அடடே; ரேஷன் கார்டில் காஸ் இணைப்பு விவரம் பதிவு: 36 ஆயிரம் லிட்டர் மண்ணெண்ணெய் மீதமானது
ADDED : ஜூலை 14, 2011 09:38 PM
திருப்பூர் : குடிமைப்பொருள் வழங்கல் துறை எடுத்த பல்வேறு நடவடிக்கை களால்,
ரேஷன் கடைகளில் மண்ணெண்ணெய் வினியோகம் ஓரளவு சீரடைந்துள்ளது. போலி ரேஷன்
கார்டு கண்டறிதல் மற்றும் காஸ் சிலிண்டர் இணைப்பு விவரங்கள், ரேஷன்
கார்டில் பதிவு செய்யப்பட்டது போன்ற காரணங்களால், இதுவரை 36 ஆயிரம்
லிட்டர் மண்ணெண்ணெய் மீதமாகி யுள்ளது. மாவட்டம் முழுவதும் உள்ள உண்மையான
பயனாளிகள் கண்டறியப்பட்டால், விற்பனை முற்றிலும் சீரடையும்; பற்றாக்குறை
ஏற்பட வாய்ப்பிருக்காது. திருப்பூர் மாவட்டம் முழுவதும் 7.11 லட்சம் ரேஷன்
கார்டுகள் உள்ளன. திருப்பூர் தாலுகாவில் மட்டும் 2.5 லட்சம் கார்டுகள்
உள்ளன. வீட்டு சமையல் காஸ் இணைப்புகள் 5.5 லட்சம் உள்ளன. இதில், ஒரு
சிலிண்டர் இணைப்பு உள்ளவர்களுக்கு மாதம் மூன்று லிட்டர் மண்ணெண்ணெய் ரேஷன்
கடையில் வழங்கப்படுகிறது. சிலிண்டர் இணைப்பு இல்லாத கார்டுகளுக்கு
மாநகராட்சி பகுதியில் ஏழு லிட்டர், பேரூராட்சி பகுதியில் ஐந்து லிட்டர்
வழங்கப்படுகிறது. இரண்டு சிலிண்டர் உள்ளவர்களுக்கு
மண்ணெண்ணெய் கிடையாது. மாவட்டம் முழுவதும் மாதம் தோறும் சராசரியாக 1,300
கிலோ லிட்டர் மண்ணெண்ணெய் ஒதுக்கப்படுகிறது. தமிழகத்துக்கான மண்ணெண் ணெய்
ஒதுக்கீட்டை, மத்திய அரசு சமீபத்தில் திடீரென குறைத்தது. இதனால் ஏற்படும்
பற்றாக்குறையை சமாளிக்க, பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
ரேஷன் கடையில் மண்ணெண்ணெய் விற்பனை விலை லிட்டர் 13 ரூபா யாக உள்ளது.
மத்திய அரசு, மானியம் வழங்குவதால் விலை குறைவாக வழங்கப்படுகிறது. ஆனால்,
வெளிமார்க்கெட்டில் ஒரு லிட்டர் 40 ரூபாய்க்கும் மேல் உள்ளது. போலி ரேஷன்
கார்டு களை கொண்டும், காஸ் சிலிண்டர் வைத்திருந்தும் வாங்குவோரால்
கள்ளச்சந்தையில் மண்ணெண்ணெய் விற்கப்பட்டது. பல பகுதிகளில் உண்மையான
பயனாளிகள் மண்ணெண்ணெய் கிடைக் காமல் தவிக்கும் நிலை ஏற்பட்டது.
இப்பிரச்னைக்கு தீர்வு காண, குடிமைப் பொருள் வழங்கல் துறையினர் முயற்சி
மேற்கொண்டனர். கடந்த மாதம், அனைத்து ரேஷன் கடை ஊழியர்களின் ஆலோசனை கூட்டம்
நடத்தப்பட்டது. அப்போது, அனைத்து ஊழியர்களிடமும் அச்சடிக்கப்பட்ட படிவம்
வழங்கப்பட்டது. அதில், அவர்கள் பணியாற்றும் ரேஷன் கடையில் உள்ள கார்டுகள்
விவரம் கேட்கப்பட்டது. அதன் மூலம் போலி கார்டுகள் கண்டறியப்பட்டன. மேலும்,
காஸ் ஏஜன்சிகள் மூலம் கடந்த மாதம் குடிமைப்பொருள் வழங்கல் துறை சார்பில்,
காஸ் இணைப்பு குறித்த விவரங்கள் ரேஷன் கார்டில் பதிவு செய்யும் பணி
நடந்தது. காஸ் இணைப்பு பெற்ற விவரங்களை, ரேஷன் கார்டில் பதிவு செய்யாமல்
விட்ட பலரும், ரேஷனில் மண்ணெண்ணெய் வாங்கி வந்தனர். காஸ் விவரம் பதிவு
செய்யப்பட்ட வகையிலும் மண்ணெண்ணெய் மீதமாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
திருப்பூர் தாலுகா அளவில் 239 கடைகள் உள்ளன. இதில் உள்ள 2.58 லட்சம்
கார்டுகளில் 1.54 லட்சம் கார்டுகள் மட்டுமே மண்ணெண்ணெய் பெறும் கார்டு கள்.
இவற்றுக்கு சராசரியாக 450 கிலோ லிட்டர் மண்ணெண்ணெய் ஒதுக்கப்படு கிறது.
தற்போது போலி கார்டுகள் கண்டறியப்பட்டுள்ளதால், 30 ஆயிரம் லிட்டர்
மண்ணெண்ணெய் மீதமாகியுள் ளது. காஸ் இணைப்பு ரேஷன் கார்டில் பதிவு
செய்யப்பட்டதால் 6,000 லிட்டர் மீதமாகியுள்ளது. காஸ் இணைப்பு பெற்றுள்ள
அனைத்து ரேஷன் கார்டுகளிலும் பதிவு செய்யப்பட்டால், மண்ணெண்ணெய் மீதமாகும்
அளவு @மலும் அதிகரிக்கும். கள்ளச்சந்தையில் விற்பனை தடுக்கப்படுவதோடு,
உண்மையான பயனாளிகளுக்கும் பற்றாக்குறை இல்லாமல் ரேஷன் கடையில் மண்ணெண்ணெய்
பெறும் நிலை உருவாகியுள்ளது


