/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/புறக்கணிக்கும் அரசு பஸ்கள் கொடுமுடியில் 17ல் மறியல்புறக்கணிக்கும் அரசு பஸ்கள் கொடுமுடியில் 17ல் மறியல்
புறக்கணிக்கும் அரசு பஸ்கள் கொடுமுடியில் 17ல் மறியல்
புறக்கணிக்கும் அரசு பஸ்கள் கொடுமுடியில் 17ல் மறியல்
புறக்கணிக்கும் அரசு பஸ்கள் கொடுமுடியில் 17ல் மறியல்
ADDED : செப் 14, 2011 01:11 AM
கொடுமுடி: கொடுமுடி பயணிகளை அரசு போக்குவரத்துக் கழக பஸ்கள் ஏற்ற மறுப்பதை கண்டித்து, வரும் 17ம் தேதி, கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், கொடுமுடியில் மறியல் போராட்டம் நடக்கிறது.கரூர் மற்றும் ஈரோடு பஸ் ஸ்டாண்டுகளில் இருந்து, இவ்விரு ஊர்களுக்கும் புறப்படும் அரசு பஸ்களில், கொடுமுடி செல்லும் பயணிகளை, டிரைவர், கண்டக்டர்கள் ஏற்ற மறுப்பது வாடிக்கை.
பஸ் ஸ்டாண்டில் இருந்து பஸ் புறப்படும் போது மட்டும், வெளியே பெண்கள், குழந்தைகளுடன் காத்திருப்பவர்களை ஏற்றிக் கொள்கின்றனர். இன்னும் சில பஸ்களில் கொடுமுடி பயணிகளை ஏற்றுவதேயில்லை.பல ஆண்டுளாக நீடிக்கும் இப்பிரச்னை 2009ல் மறியலாக வெடித்தது. அப்போது, பொதுமக்களுடன் நடந்த பேச்சுவார்த்தையில், தாசில்தார், போலீஸார் மற்றும் அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் பங்கேற்றனர். ஈரோடு மற்றும் கரூர் செல்லும் பஸ்களில், கொடுமுடி பயணிகளை இருக்கையில் அமர வைத்து அழைத்து வருவது, மதுரை உள்ளிட்ட தொலை தூர பஸ்களில் கடைசி ஆறு இருக்கைகளை கொடுமுடி பயணிகளுக்கு ஒதுக்குவது உள்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக, அதிகாரிகள் கையெழுத்திட்டனர். ஆனால், இதுவரை இப்பிரச்னை நீடிக்கிறது. கூடுதல் பஸ்களும் இயக்கப்படவில்லை.கம்யூனிஸ்ட் கொடுமுடி ஒன்றிய செயலாளர் குணசேகரன் கூறுகையில், ''இப்பிரச்னையைக் கண்டித்து வரும் 17ம் தேதி கொடுமுடியில் மறியல் போராட்டம் நடத்தப்படும்,'' என்றார்.