/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/வாக்குச்சாவடி மையங்களில் செல்போன் பயன்படுத்த தேர்தல் ஆணையம் திடீர் தடைவாக்குச்சாவடி மையங்களில் செல்போன் பயன்படுத்த தேர்தல் ஆணையம் திடீர் தடை
வாக்குச்சாவடி மையங்களில் செல்போன் பயன்படுத்த தேர்தல் ஆணையம் திடீர் தடை
வாக்குச்சாவடி மையங்களில் செல்போன் பயன்படுத்த தேர்தல் ஆணையம் திடீர் தடை
வாக்குச்சாவடி மையங்களில் செல்போன் பயன்படுத்த தேர்தல் ஆணையம் திடீர் தடை
ADDED : செப் 25, 2011 12:51 AM
தூத்துக்குடி : வாக்குச்சாவடி மையங்களில் செல்போன் பயன்படுத்த தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
வாக்காளர்கள் ஓட்டு போட செல்லும் போது செல் கொண்டு சென்றால் பறிமுதல் செய்யப்படும்.தமிழகத்தில் இரண்டு கட்டமாக அடுத்த மாதம் உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. இதனை ஒட்டி தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்து விட்டதால் அரசு விழாக்கள், திங்கட்கிழமை மக்கள் குறைதீர்க்கும் நாள், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் உள்ளிட்ட அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தேர்தலில் வேட்பாளர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும். செலவு எவ்வளவு செய்ய வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவித்து விட்டது. புதியதாக இனிமேல் யாரும் வாக்காளராக சேர்ந்து உள்ளாட்சி தேர்தலில் ஓட்டு போட முடியாது என்று மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. தொடர்ந்து பல்வேறு கிடுக்கிப்பிடி உத்தரவுகளை தேர்தல் ஆணையம் தொடர்ந்து போட்டு வருகிறது. இந் நிலையில் மாநில தேர்தல் ஆணைய செயலாளர் சேவியர் கிறிஸ்தோ நாயகம் வெளியிட்டுள்ள புதிய உத்தரவு 6789/2011ல் கூறப்பட்டிருப்பதாவது; வாக்குச்சாவடி மையங்களில் வேட்பாளர்கள், வேட்பாளர்களின் முகவர்கள், தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் யாரும் செல்போன் பயன்படுத்தக் கூடாது. வாக்களிக்க வாக்குச்சாவடிகளுக்கு வரும் வாக்காளர்களும் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. வாக்குச்சாவடி தலைமை அலுவலர் மட்டும் செல்போன் பயன்படுத்த அனுமதியளிக்கப்படுகிறது. இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. செல்போன் கொண்டு செ ல்ல தடை விதிக்கப்பட்டுள் ளதால் மீறி கொண்டு சென்றால் அந்த செல்போன் பறிமுதல் செய்யப்படும். மாநில தேர்தல் ஆணையருக்கு தெரிவித்து அந்த நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் திட்டமிட்டிருப்பதாக தேர்தல் ஆணைய தகவல்கள் தெரிவிக்கின்றன.