ADDED : ஜூலை 11, 2011 02:45 AM
உடையார்பாளைம்: உடையார்பாளையம் அருகே சொத்துத் தகராறில் பெண்ணைத் தாக்கிய
தம்பதியினரை போலீஸார் கைது செய்தனர்.உடையார்பாளையம் அருகே உள்ள கீழநத்தம்
பஞ்சாயத்தை சேர்ந்தவர் பாண்டியன் மனைவி கண்ணகி (35).
இவ ரை சொத்து பிரச்னை
காரணமாக கண்ணன் உட்பட மூன்று பேர் சேர்ந்து தாக்கியுள்ளனர். இதுகுறித்து
விக்கிரமங்கலம் போலீஸ் எஸ்.ஐ., பழனிசாமி வழக்குப்பதிவு செய்து கண்ணன்,
அவரது மனைவி கொளஞ்சி ஆகியோரை கைது செய்தனர்.