/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/களக்காடு பகுதியில் கூட்டுறவு சங்க பால் தட்டுப்பாடின்றி கிடைக்க செய்வேன் : டவுன் பஞ்.,பா.ஜ.,வேட்பாளர்களக்காடு பகுதியில் கூட்டுறவு சங்க பால் தட்டுப்பாடின்றி கிடைக்க செய்வேன் : டவுன் பஞ்.,பா.ஜ.,வேட்பாளர்
களக்காடு பகுதியில் கூட்டுறவு சங்க பால் தட்டுப்பாடின்றி கிடைக்க செய்வேன் : டவுன் பஞ்.,பா.ஜ.,வேட்பாளர்
களக்காடு பகுதியில் கூட்டுறவு சங்க பால் தட்டுப்பாடின்றி கிடைக்க செய்வேன் : டவுன் பஞ்.,பா.ஜ.,வேட்பாளர்
களக்காடு பகுதியில் கூட்டுறவு சங்க பால் தட்டுப்பாடின்றி கிடைக்க செய்வேன் : டவுன் பஞ்.,பா.ஜ.,வேட்பாளர்
களக்காடு : 'களக்காடு பகுதியில் கூட்டுறவு சங்க பால் தட்டுப்பாடின்றி கிடைக்க வழி செய்வேன்' என பா.ஜ., வேட்பாளர் இசையரசி கூறினார்.
களக்காடு டவுன் பஞ்.,தலைவர் பதவிக்கு பா.ஜ., சார்பில் போட்டியிடுகிறேன். கடந்த 2006ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டு குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பினை இழந்தேன். தற்போது மீண்டும் நான் போட்டியிடுகிறேன். களக்காடு டவுன் பஞ்.,பகுதி மக்களுக்கு களக்காடு கூட்டுறவு சங்கம் மூலம் பால் வினியோகம் செய்யப்படுகிறது. களக்காடு பகுதி மக்களுக்கு பால் தட்டுப்பாடு இல்லாமல் அனைத்து மக்களுக்கு கிடைக்க நடவடிக்கை எடுப்பேன்.
களக்காடு டவுன் பஞ்.,சில் பாதாள சாக்கடை திட்டம், தொழில் கல்வி மையங்கள் கொண்டுவர நடவடிக்கை எடுப்பேன். களக்காட்டில் வாழை சந்தை, தொழிற்சாலைகள் கொண்டு வருவேன். களக்காட்டிலிருந்து சென்னைக்கு அரசு சொகுசு விரைவு பஸ், குற்றாலத்திலிருந்து களக்காடு வழியாக கன்னியாகுமரிக்கு ரயில் போக்குவரத்து வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகளை செய்து கொடுக்க பாடுபடுவேன்.
களக்காடு டவுன் பஞ்.,சினை பொறுத்தவரை இதுவரை இருந்த திமுக.,- அதிமுக.,-காங்., போன்ற கட்சிகள் ஆக்கப்பூர்வமான எவ்வித பணிகளையும் மேற்கொள்ளவில்லை. கடந்த 3 முறையாக டவுன் பஞ்., திமுக தலைவர்கள் மக்களுக்கு பயனளிக்ககூடிய திட்டங்கள் எதையும் மேற்கொண்டதாக தெரியவில்லை. நான் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டால் களக்காடு டவுன் பஞ்., சினை தமிழகத்தில் முன்மாதிரி டவுன் பஞ்.,சாக மாற்றுவேன்'' என்றார். மேலும் பா.ஜ., ஆட்சியின் சாதனைகளையும், காங்., ஆட்சியின் வேதனைகளையும் கூறி ஓட்டு சேகரித்து வருவதாக இசையரசி தெரிவித்தார்.


