சரணடைய வந்த எம்.பி.யை மடக்கி பிடித்தது போலீஸ்
சரணடைய வந்த எம்.பி.யை மடக்கி பிடித்தது போலீஸ்
சரணடைய வந்த எம்.பி.யை மடக்கி பிடித்தது போலீஸ்
ADDED : ஜூலை 14, 2011 04:43 AM
தர்பங்கா: பீகாரில் மின்வாரிய அலுவலகத்தை சூறையாடிய வழக்கில் போலீசாரால் தேடப்பட்டுவந்த பா.ஜ.
எம்.பி. கீர்த்தி ஜஹா ஆசாத் நேற்று கோர்டில் சரணடைய வருவதற்கு முன்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார். பீகாரில் கடந்த 2001-ம் ஆண்டு தர்பங்காவில் உள்ள மாநில் அரசு மின்வாரிய அலுவலகத்திற்குள் புகுந்த கீர்த்தி ஜஹா ஆசாத், அலுவலகத்தை அடித்து நொறுக்கி சூறையாடியதுடன், பொதுமேலாளரை தாக்கி காயப்படுத்தினார்.இது தொடர்பாக போலீசில் புகார் செய்யப்பட்டது. எனினும் இவர் கைது செய்யப்படவில்லை. இந்நிலையில் கடந்த ஜூன் 24-ம் தேதி உள்ளூர் கோர்ட் இவருக்கு ஜாமினில் வெளிவரமுடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ஆசாத் நேற்று கோர்டில் சரணடைய வந்தார். அதற்குள் போலீசார் அவரை கைது செய்தனர். முன்னதாக இவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வன்முறை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.