இங்கிலாந்து தொடரே என் கனவு: சச்சின்
இங்கிலாந்து தொடரே என் கனவு: சச்சின்
இங்கிலாந்து தொடரே என் கனவு: சச்சின்
ADDED : ஜூலை 12, 2011 08:31 PM
லண்டன் : இங்கிலாந்து தொடரே என் கனவு என இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார்.
இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் பங்கேற்கிறது. இதற்காக இந்திய அணி வீரர்கள் இன்று லண்டன் கிளம்பி சென்றனர். இது குறித்து இங்கிலாந்து பத்திரிகைக்கு பேட்டியளித்துள்ள சச்சின் டெண்டுல்கர், நான் சாதனைகள் குறித்து சிந்திக்கவில்லை. தொடரை சிறப்பாக விளையாடுவது குறித்து சந்திக்கின்றேன். சாதனைகளை முறியடிப்பதே எனது திறமையின் ரகசியம் அல்ல. கிரிக்கெட் தொடரை அனுபவித்து விளையாடுவதால் விளையாட்டின் திறன் அதிகமாகும். இதுவே எனக்கு முக்கியம். தற்போதைக்கு ஓய்வு பெறும் எண்ணமல்ல. ஒவ்வொரு நிமிடத்தையும் அனுபவித்து கொண்டுள்ளேன். எவ்வாறு ஆட்டத்தை உற்சாகப்படுத்துவது மற்றும் விளையாட்டை எவ்வாறு மேம்படுத்துவது குறித்து சிந்திக்கின்றேன். நாளை என்ன நடக்கும்என்பதை யாராலும் தெரிந்து கொள்ள முடியாது என கூறியுள்ளார்.