சேலத்தில் வீரபாண்டி ஆறுமுகம், சென்னையில் ரங்கநாதன் சிறைகளுக்கு மாற்றக் கோரி ஐகோர்ட்டில் மனு
சேலத்தில் வீரபாண்டி ஆறுமுகம், சென்னையில் ரங்கநாதன் சிறைகளுக்கு மாற்றக் கோரி ஐகோர்ட்டில் மனு
சேலத்தில் வீரபாண்டி ஆறுமுகம், சென்னையில் ரங்கநாதன் சிறைகளுக்கு மாற்றக் கோரி ஐகோர்ட்டில் மனு

சென்னை: சேலம் சிறைக்கு முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தையும், சென்னை சிறைக்கு முன்னாள் எம்.எல்.ஏ., ரங்கநாதனையும் மாற்றக் கோரி, மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இவர் மீது, குண்டர் தடுப்புச் சட்டமும் பாய்ந்துள்ளது. சேலம் அழகாபுரம் கிராமத்தில் உள்ள நிலம் தொடர்பாக, முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் கைது செய்யப்பட்டார். இவர், திருச்சி சிறையில் உள்ளார். சென்னை ஐகோர்ட்டில் வீரபாண்டி ஆறுமுகத்தின் மகன் ராஜேந்திரன் தாக்கல் செய்த மனு:சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் பதிவு செய்த வழக்கில், என் தந்தை கைது செய்யப்பட்டார். அவரை காவலில் வைக்க, மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். அப்போது, சேலம் மத்திய சிறையில் அவரை அடைக்க வேண்டும் என உத்தரவிட்டார். ஆனால், உள்நோக்கம் கொண்டு, திருச்சி சிறைக்கு கொண்டு சென்றனர். என் தந்தைக்கும், குடும்பத்தினருக்கும் தொந்தரவு கொடுப்பது தான் அவர்களின் நோக்கம். சிறையில் இருப்பவரைப் பார்ப்பதற்கான உரிமை என்பது அடிப்படை உரிமை என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. திருச்சி சிறையில், என் தந்தையை வைத்திருப்பதன் மூலம், அங்கே சென்று நாங்கள் பார்ப்பது கஷ்டம். இதனால், அவரைப் பார்க்க முடியாமல் போகிறது. சட்ட ஆலோசனை பெற ஒவ்வொரு முறையும் வழக்கறிஞர்கள் திருச்சி செல்வதும் கஷ்டம்.எனவே, என் தந்தையை திருச்சி சிறையில் இருந்து, சேலம் மத்திய சிறைக்கு மாற்ற உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது. இதேபோன்று, முன்னாள் எம்.எல்.ஏ., ரங்கநாதனை, வேலூர் சிறையில் இருந்து சென்னைக்கு மாற்ற உத்தரவிடக் கோரி, அவரது மனைவி நளினி மனு தாக்கல் செய்துள்ளார்.இம்மனுக்கள், நீதிபதிகள் டி.முருகேசன், சசிதரன் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' முன் விசாரணைக்கு வந்தது. இம்மனுக்களுக்கு, அரசிடம் இருந்து விளக்கம் பெற, அரசு குற்றவியல் வழக்கறிஞருக்கு உத்தரவிட்டு, விசாரணையை வரும் 12 ம் தேதிக்கு, 'டிவிஷன் பெஞ்ச்' தள்ளிவைத்தது.