Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/சென்னையில் மாயமான 3 பெண்கள் கடலூரில் காதலர்களுடன் மீட்பு

சென்னையில் மாயமான 3 பெண்கள் கடலூரில் காதலர்களுடன் மீட்பு

சென்னையில் மாயமான 3 பெண்கள் கடலூரில் காதலர்களுடன் மீட்பு

சென்னையில் மாயமான 3 பெண்கள் கடலூரில் காதலர்களுடன் மீட்பு

ADDED : செப் 30, 2011 11:12 PM


Google News
முதுநகர்: சென்னையில் மாயமான மூன்று இளம் பெண்கள், கடலூரில் காதலர்களுடன் மீட்கப்பட்டு பெற்றோருடன் அனுப்பி வைக்கப்பட்டனர்.

சென்னை காசிமேடு மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர்கள் உதயகுமார் மகள் ரம்யா, 18, சங்கர் மகள் தேவி, 18, குமார் மகள் மாலினி, 19. நண்பர்களான மூவரும் நேற்று முன்தினம் காலை முதல் காணவில்லை என்று அவர்களது பெற்றோர், காசிமேடு போலீசில் புகார் செய்தனர். அவர்கள் அனைத்து மாவட்ட போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு, கடலூர் முதுநகர், சலங்கை நகர் மணிகண்டன் வீட்டிற்கு மூன்று இளம் பெண்களும், நான்கு வாலிபர்களும் வந்து தங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. முதுநகர் போலீசார் நேற்று காலை 7 மணிக்குச் சென்று, அங்கு தங்கியிருந்த மூன்று இளம் பெண்கள் மற்றும் நான்கு வாலிபர்களை பிடித்து விசாரித்தனர்.சென்னை காசிமேடு ரம்யா, தேவி, மாலினி, பார்த்தசாரதி மகன் ஆனந்த், ஆனந்த் மகன் ராசு, வீரமணி மகன் வினோத் என்பதும், காதலர்களான இவர்கள் நேற்று முன்தினம் காலை வீட்டிலிருந்து புறப்பட்டு, காசிமேடு நாராயணன் மகன் ராஜி, 19 என்பவருடன் இரவு கடலூர் வந்துள்ளனர். பின்னர் ராஜியின் நண்பரான கடலூர் முதுநகர் சலங்கை நகரில் உள்ள மணிகண்டன் வீட்டில் தங்கியது தெரிய வந்தது. போலீசார், மூன்று பெண்களையும் மீட்டு, அனைத்து மகளிர் போலீசில் ஒப்படைத்தனர். வாலிபர்கள் நான்கு பேரையும் முதுநகர் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதுகுறித்து சென்னை காசிமேடு போலீசாருக்கும், மூன்று பெண்களின் பெற்றோர்களுக்கும் போலீசார் தகவல் கொடுத்து வரவழைத்தனர். நேற்று இரவு, மூன்று பெண்களையும் காசிமேடு போலீசார் முன்னிலையில் அவர்களது பெற்றோர் வசம் ஒப்படைத்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us