/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/கி.கிரி மாவட்டத்தில் நாளை விஜயகாந்த் பிரச்சாரம்கி.கிரி மாவட்டத்தில் நாளை விஜயகாந்த் பிரச்சாரம்
கி.கிரி மாவட்டத்தில் நாளை விஜயகாந்த் பிரச்சாரம்
கி.கிரி மாவட்டத்தில் நாளை விஜயகாந்த் பிரச்சாரம்
கி.கிரி மாவட்டத்தில் நாளை விஜயகாந்த் பிரச்சாரம்
ADDED : அக் 06, 2011 03:14 AM
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தே.மு.தி.க., வேட்பாளர்களை ஆதரித்து நாளை (அக்.,7) விஜயகாந்த் தேர்தல் பிரச்சாரம் செய்கிறார்.
மாவட்ட செயலாளர் சந்திரன் வெளியிட்ட அறிக்கை:
ஓசூர் நகராட்சி தலைவர் தேர்தலில் தே.மு.தி.க., சார்பில் மாவட்ட செயலாளர்
சந்திரன் மற்றும் 45 வார்டுகளில் தே.மு.தி.க., மற்றும் கூட்டணி
வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய
தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் நாளை ஓசூர் நகராட்சி பகுதியில்
சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் செய்கிறார்.
ஓசூர் ராம்நகர் அண்ணாதுரை சிலை அருகே நடக்கும் பிரச்சார கூட்டத்தில்
நகராட்சி தலைவர் வேட்பாளர் சந்திரன் மற்றும் 45 வார்டு வேட்பாளர்களுக்கு
விஜயகாந்த் ஆதரவு திரட்டி பேசுகிறார். கடசி நிர்வாகிகள், தொண்டர்கள் இந்த
பிரச்சார நிகழ்ச்சியில் தவறாமல் கலந்து கொள்ள கேட்டு கொள்கிறோம்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


