Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ஓட்டு எண்ணிக்கை மையங்களுக்கு டெலிபோன் இணைப்பு

ஓட்டு எண்ணிக்கை மையங்களுக்கு டெலிபோன் இணைப்பு

ஓட்டு எண்ணிக்கை மையங்களுக்கு டெலிபோன் இணைப்பு

ஓட்டு எண்ணிக்கை மையங்களுக்கு டெலிபோன் இணைப்பு

ADDED : அக் 05, 2011 10:27 PM


Google News
திருப்பூர் : உள்ளாட்சி தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு, வரும் 17, 19ம் தேதிகளில் இரண்டு கட்டமாக நடக்கிறது. திருப்பூர் மாவட்டத்தில் 2,434 ஓட்டுச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு நடக்கிறது. பதிவாகும் ஓட்டுகள், வரும் 21ல் எண்ணப்படுகின்றன.

திருப்பூர், அவிநாசி, பல்லடம், உடுமலை, குண்டடம், காங்கயம், மடத்துக்குளம், தாராபுரம், வெள்ளகோவில், மூலனூர், ஊத்துக்குளி பகுதிகளில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி, கல்லூரிகள் ஓட்டு எண்ணிக்கை மையங்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளன. மொத்தம் 25 பகுதிகளில் ஓட்டு எண்ணிக்கை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ஓட்டு எண்ணிக்கை குறித்த விவரங்கள் வெளியிடவும், மாவட்ட தேர்தல் பிரிவு மற்றும் மாநில தேர்தல் கமிஷன் அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும், ஓட்டு எண்ணிக்கை மையங்களுக்கு டெலிபோன் இணைப்புகள் வழங்கப்பட உள்ளன. இதற்கான பணியில் பி.எஸ்.என்.எல்., ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

ஓட்டு எண்ணிக்கை நிலவரம் மற்றும் முடிவுகளை உடனுக்குடன் மாவட்ட தேர்தல் பிரிவு மற்றும் மாநில தேர்தல் கமிஷனுக்கு தெரிவிக்க இன்டர்நெட் இணைப்பும் தேவைப்படுகிறது. அதனால், அம்மையங்களில் இன்டர்நெட் இணைப்பு வழங்கவும் கணக்கெடுத்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us