/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/பருத்தி எடுக்க பேட்டரியில் இயங்கும் மிஷின்பருத்தி எடுக்க பேட்டரியில் இயங்கும் மிஷின்
பருத்தி எடுக்க பேட்டரியில் இயங்கும் மிஷின்
பருத்தி எடுக்க பேட்டரியில் இயங்கும் மிஷின்
பருத்தி எடுக்க பேட்டரியில் இயங்கும் மிஷின்
ADDED : அக் 04, 2011 10:37 PM
ஸ்ரீவில்லிபுத்தூர்:ஸ்ரீவில்லிபுத்தூரில் கையடக்க மிஷின் கொண்டு, செடிகளில் இருந்து நேரடியாக பஞ்” எடுப்பதால் விவசாயிகள் வேலைப்பளு குறைந்துள்ளது. விவசாய பணிகளில் ஈடுபடுவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இதனால் விவசாயம் கேள்விக்குறியாகி வருகிறது. இந்நிலையில், விருதுநகர் மாவட்டத்தில் அதிகளவில் நிலப்பரப்பில் விவசாயிகள் பருத்தி விவசாயம் செய்து வருகின்றனர். ஆனால் விளைந்த பருத்தியை பறிப்பதற்கு ஆட்கள் கிடைக்காத நிலை இருந்து வருகிறது. இதனால் அதிக கூலி கொடுக்க வேண்டிய நிலை உள்ளதால், ஸ்ரீவில்லிபுத்தூரில் எளிதாக கையடக்க இயந்திரத்தைகொண்டு, பருத்தியிலிருந்து பஞ்” எடுக்கும் கருவி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து கார்த்திக் ராஜா கூறியதாவது: பஞ்” எடுக்க ஆட்கள் கிடைக்காத நிலையில் இந்த இயந்திரத்தை கொண்டு பருத்தி எடுக்கப்பட்டு வருகிறது. 600 கிராம் எடையுடன் கூடிய இந்த மிஷின், பேட்டரி கொண்டு இயங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மிஷினை பருத்தி அருகே வைத்து அழுத்தினால் தூசி நீங்கி பஞ்” கூடையினுள் வந்து விழுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம் தொடர்ந்து பஞ்” எடுக்கலாம். இதன் விலை 11 ஆயிரம் ரூபாய். மிஷின் மூலம் ஒரு நாளைக்கு அதிக பட்சமாக 40 கிலோ முதல் 60 கிலோ வரை எடுக்கலாம். தூசி எதுவும் இருக்காது என்பதால், அப்படியே விலைக்கு கொடுத்து விடலாம். இதற்கு பராமரிப்பு செலவு மிக குறைவாகவே ஏற்படும்,என்றார்.


