/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ஆபத்தான தொழிற்சாலைகளை இடம் மாற்றுவோம்ஆபத்தான தொழிற்சாலைகளை இடம் மாற்றுவோம்
ஆபத்தான தொழிற்சாலைகளை இடம் மாற்றுவோம்
ஆபத்தான தொழிற்சாலைகளை இடம் மாற்றுவோம்
ஆபத்தான தொழிற்சாலைகளை இடம் மாற்றுவோம்
ADDED : அக் 04, 2011 01:54 AM
புதுச்சேரி : இந்திரா நகர் தொகுதியில் இயங்கும், ஆபத்தான இரண்டு
தொழிற்சாலைகள் இடமாற்றம் செய்யப்படும் என அ.தி.மு.க., செயலர் அன்பழகன்
எம்.எல்.ஏ., பேசினார்.இந்திரா நகர் தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர்
பாஸ்கருக்கு ஆதரவாக அவர் ஓட்டு சேகரித்து நேற்று பேசியதாவது:இந்திரா நகர்
தொகுதியில் அடிப்படை வசதிகள் கூட செய்யப்படவில்லை.
சரியான அழுத்தம்
இல்லாததால் காமராஜர் நகர் முழுவதும் மக்கள் சிரமத்துடன் தரையோடு தண்ணீர்
பிடிக்கின்றனர். அடிக்கடி ஏற்படும் மின்தடையால் மக்கள் சிரமப்படுகின்றனர்.
மக்களின் அடிப்படை சுகாதார பிரச்னைகள் கூட இத்தொகுதியில் பட இடங்களில்
நிறைவேற்றப்படவில்லை. மக்களுக்கு தேவையான ரேஷன் பொருட்கள் மாதந்தோறும்
வழங்கபடுகிறதா... இலவச அரிசியாவது மாதந்தோறும் கொடுக்கிறார்களா என்றால்
அதுவும் இல்லை. மிளகாய், பருப்பு உள்ளிட்ட 7 பொருட்கள் மாதங்தோறும் குறைந்த
விலையில் வழங்கப்படும் என்றனர். வழங்கபடுகிறதா இந்திரா நகர் தொகுதியில் பல
இடங்களில் மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் ரசாயன தொழிற்சாலைகள்
இருக்கிறது. மக்கள் அதிகம் வசிக்கும் காந்தி திருநல்லூரியில் ஒரு கெமிக்கல்
தொழிற்சாலை உள்ளது. அங்குள்ள மக்கள் பயத்துடன் வாழ்கின்றனர். இது மக்களின்
உயிர் பிரச்னை. இதில் கூட முதல்வர் ரங்கசாமி எந்தவித நடவடிக்கையும்
எடுக்கவில்லை. கெமிக்கல் கம்பெனி மக்கள் வசிக்கும் பகுதியில் இருப்பதற்கு
எந்த சட்டம் அனுமதிக்கிறது. இந்த பகுதி மக்கள்
ஏமாளிகளா?அ.தி.மு.க.,வேட்பாளர் பாஸ்கர் வெற்றிப்பெற்றால் இந்திரா நகர்
தொகுதியில் இயங்கும் உயிருக்கு ஆபத்தான இரண்டு தொழிற்சாலைகளை இடம் மாற்றம்
செய்வொம். இவ்வாறு அன்பழகன் பேசினார்.


