/உள்ளூர் செய்திகள்/தஞ்சாவூர்/குடந்தையில் லிம்கா சாதனை படைத்தவர்களுக்கு பாராட்டுகுடந்தையில் லிம்கா சாதனை படைத்தவர்களுக்கு பாராட்டு
குடந்தையில் லிம்கா சாதனை படைத்தவர்களுக்கு பாராட்டு
குடந்தையில் லிம்கா சாதனை படைத்தவர்களுக்கு பாராட்டு
குடந்தையில் லிம்கா சாதனை படைத்தவர்களுக்கு பாராட்டு
ADDED : அக் 04, 2011 12:16 AM
கும்பகோணம்: கும்பகோணத்தில் இண்டியன் புக் ஆப் ரெக்கார்டு மற்றும் லிம்கா சாதனை படைத்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா மற்றும் பாராட்டு விழா நேற்று முன்தினம் நடைபெற்றது.
கும்பகோணம் ரோட்டர் கலாச்சார மையத்தில் நடைபெற்ற விழாவுக்கு கும்பகோணம் ரோட்டரி சங்கத் தலைவர் பாலாஜி தலைமை வகித்தார். விழாவில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன் உயிரை பணயம் வைத்து சுருக்கு கயிற்றில் தொங்கி சாதனை படைத்த கராத்தே செந்தில், இரு சிலிண்டர்களை தன்னுடைய தலைமுடியால் தூக்கிய சூர்யா, முன்னும் பின்னும் உடலை வளைத்து சாதனை படைத்த ஹார்சஸ்த் அயூப் மற்றும் சக்ரவர்த்தி ஆகிய நால்வருக்கும் லிம்கா சாதனை சான்றும் அதற்கான விருதுகளையும் கும்பகோணம் எம்.எல்.ஏ., அன்பழகன் வழங்கி பாராட்டு தெரிவித்தார். விழாவில் லிம்கா சாதனை தேர்வாளர் ஜெட்லி, நகர காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஜிர்ஜிஸ், மருத்துவர் நெடுஞ்செழியன் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.


