/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/தேயிலை ஏலத்தில் உயர்ந்தது விலை : 13.38 லட்சம் கிலோ விற்பனைக்கு தயார்தேயிலை ஏலத்தில் உயர்ந்தது விலை : 13.38 லட்சம் கிலோ விற்பனைக்கு தயார்
தேயிலை ஏலத்தில் உயர்ந்தது விலை : 13.38 லட்சம் கிலோ விற்பனைக்கு தயார்
தேயிலை ஏலத்தில் உயர்ந்தது விலை : 13.38 லட்சம் கிலோ விற்பனைக்கு தயார்
தேயிலை ஏலத்தில் உயர்ந்தது விலை : 13.38 லட்சம் கிலோ விற்பனைக்கு தயார்
ADDED : அக் 03, 2011 03:49 AM
குன்னூர் : குன்னூர் தேயிலை ஏலத்தில், பாகிஸ்தான், ரஷ்யா நாட்டு வர்த்தகர்கள், அதிகளவு தேயிலை தூளை வாங்கியதால் விலை உயர்ந்தது.
நீலகிரியில் உற்பத்தி செய்யப்படும் தேயிலை தூள், வாரந்தோறும் குன்னூர் தேயிலை ஏல மையத்தில் விற்கப்படுகிறது.
விற்பனை எண் 39க்கான ஏலம் இந்த வாரம் நடந்தது; 12.44 லட்சம் கிலோ தேயிலை தூள் விற்பனைக்கு இருந்தது. இலை ரகம் 8.93 லட்சம் கிலோ, டஸ்ட் ரகம் 3.51 லட்சம் கிலோ அடங்கும். ஏற்றுமதி வர்த்தகத்தில் பாகிஸ்தான், ரஷ்ய நாட்டு வர்த்தகர்கள் அதிகளவு தேயிலை தூளை வாங்கினர்.
உள்நாட்டு வர்த்தகத்தில், ஆந்திரா, கர்நாடகா, குஜராத், பஞ்சாப், மகாராஷ்டிரா மாநில வர்த்தகர்கள், அதிகளவு தேயிலை தூளை வாங்கியதால், விற்பனைக்கு வந்த தேயிலை தூளில், 92 சதவீதம் தீர்ந்தது. அனைத்து ரக தூளுக்கும், கிலோவுக்கு 3 ரூபாய் வரை அதிகரித்தது. சிடிசி., ரக தூளில், கோத்தகிரி ஹோம்டேல் தேயிலை தொழிற்சாலையின் தூளுக்கு, கிலோவுக்கு அதிகபட்சம் 142 ரூபாய் கிடைத்தது; 75க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் கிலோவுக்கு, 100 ரூபாய்க்கு மேல் பெற்றன.
ஆர்தோடக்ஸ் ரகத்தில், சாம்ராஜ் தேயிலை தொழிற்சாலை வழங்கிய தூளுக்கு கிலோவுக்கு அதிகபட்சம் 206 ரூபாய் கிடைத்தது; 35க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள், 100 ரூபாய்க்கு மேல் பெற்றன. இலை ரகத்தில் சாதாரண ரகத்துக்கு 45-49, சிறந்த ரகத்துக்கு 80-125, டஸ்ட் ரகத்தில் சாதாரண ரகத்துக்கு 48- 54, சிறந்த ரகத்துக்கு 80-125 ரூபாய் கிடைத்தது. விற்பனை எண் 40க்கான ஏலம், வரும் 6, 7ம் தேதிகளில் நடக்கிறது; 13.38 லட்சம் கிலோ தேயிலை தூள் விற்பனைக்கு உள்ளது.


