விளையாட்டு மைதான அறையில் தீ விபத்து
விளையாட்டு மைதான அறையில் தீ விபத்து
விளையாட்டு மைதான அறையில் தீ விபத்து
ADDED : அக் 01, 2011 06:50 AM
சேலம்: சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில், பல ஆண்டுகளாக பூட்டியிருந்த அறையில் தீ பிடித்ததால், விளையாட்டு பொருட்கள் தீயில் கருகின.சேலம், மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் உள் விளையாட்டு அரங்கம் உள்ளது.
25 ஆண்டுக்கு முன் கட்டப்பட்ட இந்த கட்டிடம் சிதிலமடைந்து கிடக்கிறது. இங்கு, 12 அறைகள் உள்ளன. ஒரு அறையில், 'சாய்' விளையாட்டு விடுதிக்குரிய பல்வேறு பொருட்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளன. கூடைப்பந்து விளையாடக்கூடிய நூற்றுக்கும் மேற்பட்ட பந்துகள், பீரோக்கள், பிரிட்ஜ், பத்துக்கும் மேற்பட்ட சேர்கள், 15க்கும் மேற்பட்ட தலையணைகள், இரண்டு பெட் மற்றும் பல்வேறு விளையாட்டு பொருட்களும் வைக்கப்பட்டிருந்தன.நேற்று மதியம் 1.30 மணிக்கு திடீரென பூட்டியிருந்த அறையில் இருந்து புகை வர ஆரம்பித்தது. தொடர்ந்து, தீ பிடிக்க ஆரம்பித்தது. அங்கு விளையாடிக் கொண்டிருந்த மாணவர்கள் இதை பார்த்து, தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தினர். தீ விபத்தில் ஏராளமான விளையாட்டு பொருட்கள், பீரோக்கள், பிரிட்ஜ்கள், ஒரு ஏசி மிஷின் கருகின. இவற்றின் மதிப்பு தெரியவில்லை. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம், எனத் தெரிகிறது.


