/உள்ளூர் செய்திகள்/மதுரை/17வது வார்டை முன்மாதிரியாக மாற்றுவேன்: எம்.எஸ்.ஷா17வது வார்டை முன்மாதிரியாக மாற்றுவேன்: எம்.எஸ்.ஷா
17வது வார்டை முன்மாதிரியாக மாற்றுவேன்: எம்.எஸ்.ஷா
17வது வார்டை முன்மாதிரியாக மாற்றுவேன்: எம்.எஸ்.ஷா
17வது வார்டை முன்மாதிரியாக மாற்றுவேன்: எம்.எஸ்.ஷா
ADDED : செப் 30, 2011 02:08 AM
மதுரை : மதுரை மாநகராட்சி 17வது வார்டு (எல்லீஸ்நகர்) அ.தி.மு.க., வேட்பாளர் எம்.எஸ்.ஷா வேட்புமனு தாக்கல் செய்தார்.
இவர் கூறியதாவது: திருமங்கலம் அன்னை பாத்திமா கல்லூரித் தாளாளராக உள்ளேன்.
1985லிருந்து அ.தி.மு.க.,வில் ஒன்றிய மாணவரணி அமைப்பாளராக பணியாற்றிய அனுபவம் உள்ளது. மேலும் பைபாஸ்ரோடு வேல்முருகன் நகர் துரைசாமி நகர் குடியிருப்போர் நலச் சங்கத் தலைவராக பணியாற்றியுள்ளேன். கல்வி, கட்சி, தொழில் அனுபவங்களின் மூலம் என்னுடைய வார்டை 'முன்மாதிரி'யாக மாற்றப் பாடுபடுவேன். எல்லீஸ்நகரில் உள்ள ஹாக்கி மைதானத்தில் காம்பவுண்ட் சுவர் மட்டும் கட்டப்பட்டுள்ளது. மைதானத்திற்கு செல்லும் பாதையை சீரமைப்பேன். காலை, மாலை பயிற்சிகள் நடக்க ஏற்பாடு செய்து, சிறந்த விளையாட்டு வீரர்களை சர்வதேச அளவில் உருவாக்குவேன். எல்லீஸ்நகர் கிருதுமால் நதி வாய்க்கால் தூர்வாரப்படும். இதன்மூலம் இப்பகுதி மக்கள் கொசுத்தொல்லையிலிருந்து நிரந்தரமாக தப்பிக்கலாம். குப்பைகள் தேங்காவண்ணம் தினமும் அள்ளப்படும். மேலும் மார்க்கெட்டில் கடை போடும் போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இங்கேயே நிரந்தர மார்க்கெட் அமைக்க ஏற்பாடுசெய்யப்படும்.சொந்தசெலவில் அலுவலகம் அமைத்து, மக்களின் பிரச்னைகளுக்கு உடனுக்குடன் தீர்வு காண்பேன், என்றார்.