ADDED : செப் 28, 2011 09:46 PM
திருப்பூர் : திருப்பூர் சென்ட்ரல் லயன்ஸ் கிளப், தென்னம்பாளையம் திவ்யா மருத்துவமனை மற்றும் ஜி.கே.எம்., நிட் பினிசர்ஸ் நிறுவனம் சார்பில் பெண்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.
தலைவர் பொன்னுச்சாமி, டாக்டர் செல்வராஜ், செயலாளர் ரங்கசாமி, முன்னாள் தலைவர் முருகசாமி முகாமை துவக்கி வைத்தனர். கர்ப்பப்பை பிரச்னைகள், குழந்தையின்மை பிரச்னை தொடர்பாக 75 பெண்கள் பரிசோதனை செய்தனர். 10 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான மருந்து, மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டன. நான்கு கர்ப்பிணிகளுக்கு பிரசவம்; இருவருக்கு கர்ப்பப்பை நீக்கம் அறுவை சிகிச்சை இலவசமாக மேற்கொள்ள லயன்ஸ் கிளப் ஏற்பாடு செய்தது.முகாம் ஏற்பாடுகளை ஜி.கே.எம்., நிட் பினிசர்ஸ் மோகன் செய்திருந்தார்.


