/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/கல்லூரி விடுதியில் திடீர் மோதல் புளியங்குடி அருகே 7 மாணவர்கள் கைதுகல்லூரி விடுதியில் திடீர் மோதல் புளியங்குடி அருகே 7 மாணவர்கள் கைது
கல்லூரி விடுதியில் திடீர் மோதல் புளியங்குடி அருகே 7 மாணவர்கள் கைது
கல்லூரி விடுதியில் திடீர் மோதல் புளியங்குடி அருகே 7 மாணவர்கள் கைது
கல்லூரி விடுதியில் திடீர் மோதல் புளியங்குடி அருகே 7 மாணவர்கள் கைது
ADDED : செப் 13, 2011 11:52 PM
புளியங்குடி : புளியங்குடி அருகே கல்லூரி விடுதியில் மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஏழு பேரை போலீசார் கைது செய்தனர்.
புளியங்குடி அருகே உள்ளது மலையடிக்குறிச்சி கிராமம். இங்கு தனியார் கல்லூரி உள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கல்லூரியில் உள்ள உணவகத்தில் இரவு உணவு சாப்பிட்டு கொண்டிருந்தனர். மாணவர் வெள்ளப்பாண்டி மற்றும் 4 பேர் அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்தனர். சாப்பிடும் போது அவர்கள் செல்போனில் பாட்டு கேட்டு கொண்டே இருந்தனர். இந்நிலையில் சாப்பிட வந்த மற்றொரு பிரிவை சேர்ந்த விகாந்த்(19), சக்திகுமார்(19), வினோத்ராஜ்(19) ஆகியோருக்கும், வெள்ளப்பாண்டிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. ஒரு பிரிவை சேர்ந்த மூவரும் வெள்ளப்பாண்டியிடம் தகராறு செய்ததுடன், அவதூறாக பேசி ஜாதியை கூறி திட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து வெள்ளப்பாண்டி புளியங்குடி போலீசில் புகார் செய்தார். சம்பவ இடத்திற்கு புளியங்குடி டிஎஸ்பி., ஜமீம், இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். சக்தி, விகாந்த், வினோத்ராஜ் ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் விகாந்த் கொடுத்த புகாரின் பேரில் அரவிந்த்(21), வெள்ளப்பாண்டி, சுரேஷ்குமார், தங்கம் ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தார். இந்த சம்பவத்தை தொடர்ந்து கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கல்லூரி மாணவர்களிடையே ஏற்பட்ட சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


