/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/உள்ளாட்சி தேர்தலில் போட்டி இ.கம்யூ., மாநாட்டில் தீர்மானம்உள்ளாட்சி தேர்தலில் போட்டி இ.கம்யூ., மாநாட்டில் தீர்மானம்
உள்ளாட்சி தேர்தலில் போட்டி இ.கம்யூ., மாநாட்டில் தீர்மானம்
உள்ளாட்சி தேர்தலில் போட்டி இ.கம்யூ., மாநாட்டில் தீர்மானம்
உள்ளாட்சி தேர்தலில் போட்டி இ.கம்யூ., மாநாட்டில் தீர்மானம்
ADDED : செப் 08, 2011 10:07 PM
திருப்பூர் : பொன்னாபுரம் இ.கம்யூ., கிளை மாநாடு நடந்தது; புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
செயலாளராக ராஜேந்திரன், துணை செயலாளராக சேகர், பொருளாளராக வெள்ளியங்கிரி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். நடைபெற உள்ள இ.கம்யூ., திருப்பூர் தெற்கு வட்டார மாநாட்டு பிரதிநிதியாக ராஜேந்திரன் தேர்வு செய்யப்பட்டார்.'உள்ளாட்சி தேர்தலில் முதலிபாளையம் ஊராட்சியில் போட்டியிடுதல்; முதலிபாளையம் ஊராட்சியில் விண்ணப்பித்துள்ள மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும்,' என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.* இ.கம்யூ., முதலிபாளையம் கிளை மாநாடு நடந்தது. செயலாளராக திருமலைசாமி, துணை செயலாளராக சுந்தரம், பொருளாளராக செந்தில்குமார் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.'காங்கயம், படியூர், தொட்டிபாளையம், நால்ரோடு, மானூர், சிட்கோ, முதலிபாளையம் வழியாக திருப்பூர் செல்ல புதிய பஸ் இயக்க வேண்டும்; சிட்கோ பஸ் ஸ்டாப் அருகில் செயல்படும் மதுக்கடையை பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத பகுதிக்கு மாற்ற வேண்டும்,' என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.* இ.கம்யூ., செரங்காடு கிளை மாநாடு நடந்தது. புதிய செயலாளராக கனகராஜ், துணை செயலாளர்களாக பாபு, ஜெயபாலன் தேர்வு செய்யப்பட்டனர். 'உள்ளாட்சி தேர்தலில் செரங்காடு 8, 9, 10, 11 ஆகிய வார்டுகளில் போட்டியிடுவது; வாரத்தில் மூன்று நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகிக்க வேண்டும்,' என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.