/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/சாத்தை., அருகே 5 ஆண்டுகளுக்கு பிறகு இயக்கப்பட்ட அரசு பஸ்சிற்கு வரவேற்புசாத்தை., அருகே 5 ஆண்டுகளுக்கு பிறகு இயக்கப்பட்ட அரசு பஸ்சிற்கு வரவேற்பு
சாத்தை., அருகே 5 ஆண்டுகளுக்கு பிறகு இயக்கப்பட்ட அரசு பஸ்சிற்கு வரவேற்பு
சாத்தை., அருகே 5 ஆண்டுகளுக்கு பிறகு இயக்கப்பட்ட அரசு பஸ்சிற்கு வரவேற்பு
சாத்தை., அருகே 5 ஆண்டுகளுக்கு பிறகு இயக்கப்பட்ட அரசு பஸ்சிற்கு வரவேற்பு
ADDED : செப் 03, 2011 11:29 PM
சாத்தான்குளம் : சாத்தான்குளம் அருகே 5 ஆண்டுகளுக்கு பிறகு இயக்கப்பட்ட அரசு பஸ்சுக்கு வரவேற்பு கொடுக்கப்பட்டது.
சாத்தான்குளம் அருகேயுள்ள செட்டிகுளம் பஞ்., நொ ச்சிகுளத்தில் ஒரே ஒரு அரசு டவுன் பஸ் மட்டும் சென்றுவந்தது. இதுவும் கடந்த ஐந்து வருடங்களுக்கு முன் நிறுத்தப்பட்டது. இதனால் இந்த ஊர் மக்கள் வெளியூர் செல்ல இரண் டு கிலோ மீட்டர் நடந்து சென்று பஸ் ஏற வேண்டும். எனவே தங்கள் கிராமத்தின் வழியாக பஸ் விட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இது சம்பந்தமாக சாத்தான்குளம் அதிமுக., ஒன்றிய செயலாளர் ராஜ்மோகன் யூனியன், சேர்மன் ஆனந்தராஜ் ஆகியோர் ஊர் மக்கள் சார்பில் இந்து அறநிலையத்துறை அமைச்சரும், தொகுதி எம்எல்ஏவுமான சண்முகநாதனிடம் திருநெல்வேலி செல்லும் ஏதாவது ஒரு பஸ்சை நொச்சிகுளம் வழியாக இயக்க வேண்டும் அதன் பிறகு புதிய வழித்தடம் அமைத்து ஏனைய ஊர்களுக்கும் நொச்சிகுளம் மக்கள் செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். தற்போது திருநெல்வேலியிலிருந்து சாத்தான்குளம் சிற ப்பூர் வழியாக பெரியதாழை செல்லும் 138ஏ ரூட் பஸ்சை புளியங்குளத்திலிருந்து நொச்சிகுளம், திருவரங்கநேரி வழியாக இயக்க அமைச்சர் மூலம் அனுமதி வழங்கப்பட்டது. 5 ஆண்டுகளுக்கு பிறகு நொச்சிகுளத்திலிருந்து திருநெல்வேலிக்கு அரசு பஸ் செல்வதால் மகிழ்ச்சியடைந்த ஊர் பொதுமக்கள் சார்பில் வரவேற்பு விழா நடந்தது. செட்டிகுளம் பஞ்., தலைவர் அந்தோணிராஜ் தலைமை வகித்தார். நொச்சிகுளம் ஆர். சி.,பங்குத்தந்தை மைக்கேல் ஜெகதீஷ், அதிமுக., பஞ்., செ யலாளர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி மாணவர்களுக்கு இனிப்பு வ ழங்கப்பட்டது. பஸ்சிற்கு மாலை அலங்காரம் செய்து, டிரைவர்,கண்டெக்டர்களுக்கு ஊர் பொதுமக்கள் சார்பில் பெ õன்னாடை அணிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் அதிமுக., ஒன்றியச் செயலாளர் ராஜ்மோகன், துரைப்பாண்டியன், வி.ஏ.ஓ., சத்தியராஜ், சர்வேயர் ஜாண்சன், திருவரங்கநேரி அதிமுக செயலாளர் ஜெபராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.