Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலை ஒன்றிணைந்து எதிர் கொள்ள வேண்டும்; முதல்வர் ஸ்டாலின் பேச்சு

2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலை ஒன்றிணைந்து எதிர் கொள்ள வேண்டும்; முதல்வர் ஸ்டாலின் பேச்சு

2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலை ஒன்றிணைந்து எதிர் கொள்ள வேண்டும்; முதல்வர் ஸ்டாலின் பேச்சு

2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலை ஒன்றிணைந்து எதிர் கொள்ள வேண்டும்; முதல்வர் ஸ்டாலின் பேச்சு

UPDATED : ஜூன் 01, 2025 02:49 PMADDED : ஜூன் 01, 2025 12:52 PM


Google News
Latest Tamil News
மதுரை: '2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலை ஒன்றிணைந்து எதிர் கொள்ள வேண்டும்' என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மதுரையில் நடந்த தி.மு.க., பொதுக் குழு கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: மாநில உரிமைக்கான போராட்டத்தை உறுதியோடு முன்னெடுக்கவும், நமது மண், மொழி, மானம் காத்திடவும், தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்பங்களும் ஒரு குடையின் கீழ் ஒன்றாக இணைந்து வருகின்ற சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயமாக உள்ளது.

துளியும் சமரசம் இன்றி தமிழகத்தின் உரிமையை காத்திடும் பொருட்டு ஓரணியில் தமிழகம் என்று உறுப்பினர் சேர்க்கையை தி.மு.க., வினர் மேற்கொள்ள வேண்டும் என்று பொதுக்குழு தீர்மானிக்கிறது.

கட்சியின் சார்பில் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள பூத் கமிட்டியின் ஒவ்வொரு ஓட்டு சாவடிகளிலும் குறைந்தபட்சம் 30 சதவீத வாக்காளர்களை தி.மு.க.,வின் உறுப்பினர்களாக இணைக்க இலக்கு நிர்ணயிக்கப்படுகிறது.

வீடு, வீடாக சென்று அரசின் திட்டங்களையும், உரிமை போராட்டங்களையும் எடுத்து கூறி, தமிழகத்தின் வாக்காளர்களை ஓரணியில் தமிழகம் என்ற முன்னெடுப்பில் இணைப்பதற்கான செயல்களை மேற்கொள்ள வேண்டும். அடுத்து வரும் இரண்டு மாதங்களில் மாவட்ட, பகுதி, நகர, ஒன்றிய செயலாளர்கள் தங்களுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள இலக்கினை நிறைவு செய்திட வேண்டும்.

தி.மு.க.,வினர் அனைவரும் முழுமூச்சாக உழைத்திட வேண்டும். புதிய உறுப்பினர் சேர்க்கை பணிகளை தொகுதி பார்வையாளர்களும், மாவட்ட செயலாளர்களும் முழுமையாக கண்காணித்து வெற்றிகரமாக்கி விட வேண்டும் என இந்த பொதுக்குழு தீர்மானிக்கிறது. 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலை ஒன்றிணைந்து எதிர் கொள்ள வேண்டும்.

ஆதரவு அலை!

ஒட்டுமொத்தமாக பா.ஜ.,வின் கட்டுப்பாட்டிற்குள் அ.தி.மு.க., சென்றுள்ளது. அதனால் தான் அமித்ஷா அடிக்கடி தமிழகத்திற்கு வருகிறார். தமிழகத்தையும் பா.ஜ.,வின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு செல்ல இ.பி.எஸ்., துடிக்கிறார். தி.மு.க., ஆட்சிக்கு ஆதரவு அலைதான் அதிகம் வீசுகிறது; இதனை மறைக்க சிலர் திசை திருப்ப நினைக்கின்றனர்.

7வது முறை ஆட்சி

2026ம் ஆண்டு இதே நேரத்தில் 7வது முறையாக தி.மு.க., ஆட்சி அமைத்தது என்று தலைப்புச் செய்தி வந்திருக்க வேண்டும்.கண்ணுக்கெட்டிய தூரம் வரைக்கும் எதிரிகளே இல்லை என்று ஆணவக்குரலிலோ, மமதையிலோ பேசுபவன் அல்ல. எந்த ஷா வந்தாலும் தமிழகத்தை ஆள முடியாது. டில்லிக்கு தமிழகம் எப்போதும் Out of control தான்.இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us