/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/மெஞ்ஞானபுரம் பகுதியில் அனுமதியின்றி சிலைகள் பிரதிஷ்டைமெஞ்ஞானபுரம் பகுதியில் அனுமதியின்றி சிலைகள் பிரதிஷ்டை
மெஞ்ஞானபுரம் பகுதியில் அனுமதியின்றி சிலைகள் பிரதிஷ்டை
மெஞ்ஞானபுரம் பகுதியில் அனுமதியின்றி சிலைகள் பிரதிஷ்டை
மெஞ்ஞானபுரம் பகுதியில் அனுமதியின்றி சிலைகள் பிரதிஷ்டை
ADDED : செப் 03, 2011 11:29 PM
உடன்குடி : மெஞ்ஞானபுரம் பகுதியில் அனுமதியில்லாமல் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்த இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்த 22 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது; உடன்குடி பகுதியில் இந்து மக்கள் கட்சி சார்பில் 13 இடங்களில் விநாயகர் சிலை வைப்பதற்கு போலீசார் அனுமதி வழங்கியதாக தெரிகிறது. ஆனால் அனுமதி வழங்காத கல்விளை இந்திரா நகரில் சிலை வைத்ததாக அதே ஊரைச் சேர்ந்த ராமசாமி மகன் மாசானமுத்து, பாக்கியம் மகன் குணசேகரன், ராமசாமி மகன் பேச்சிமுத்து, சந்தனகுமார், பேச்சிமுத்து மகன் உதயகுமார், இது போன்று ஜே.ஜே நகரில் சிலை வைத்ததாக கூறி பெருமாள் மகன் ரா ம்குமார், சுடலை மகன் மகேந்திரன், மாயா மகன் குமார், முருகன் மகன் சித்திரை செவ்வன், பால்சாமி மகன் சதீஷ்குமார் மற்றும் இந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் செட்டியாபத்து கணேசன், மாவட்ட பொது செயலாளர் கணேசன், உடன்குடி ஒன்றிய தலைவர் தினகரன், மாவட்ட செயலாளர் ரவிகிருஷ்ணன், மாவட்ட இளைஞர் அணி தலைவர் பாலன், சிவகணேசன் உட்பட 22 பேர் மீது மெஞ்ஞானபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


