ADDED : ஆக 19, 2011 11:33 PM
அரியலூர்: அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே, திருமழபாடி கொள்ளிடம்
ஆற்றின் மணல் குவாரியில் மணல் எடுத்து செல்வதற்காக 100க்கும் மேற்பட்ட
லாரிகள் வரிசையாக நின்றிருந்தது.
அங்கு மணல் ஏற்ற வந்த லாரி டிரைவர்
மூக்கையா (52) என்பவருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டது. அதை வயிற்றுவலி என
உணர்ந்த மூக்கையா, லாரியின் கிளீனர் ராமுவேல் என்பவரிடம், வயிற்று வலிக்கு
மாத்திரை சாப்பிட வேண்டும். எனவே, கடைக்கு சென்று டீயும் பீடியும் வாங்கி
வா என கூறினார். டீகடைக்கு சென்று திரும்பிய கிளீனர் ராமுவேல், லாரியில்
படுத்த நிலையில் டிரைவர் மூக்கையா இறந்து கிடப்பது கண்டு திடுக்கிட்டார்.
நேற்று முன்தினம் காலை நடந்த இச்சம்வம் குறித்து, ராமுவேல் கொடுத்த
புகாரின் பேரில், திருமானூர் போலீஸார் விசாரிக்கின்றனர்.


