/உள்ளூர் செய்திகள்/திருவாரூர்/திருவாரூரில் மாவட்டத்தில் சுதந்திர தினவிழா 140 பேருக்கு நலத்திட்ட உதவி: கலெக்டர் வழங்கல்திருவாரூரில் மாவட்டத்தில் சுதந்திர தினவிழா 140 பேருக்கு நலத்திட்ட உதவி: கலெக்டர் வழங்கல்
திருவாரூரில் மாவட்டத்தில் சுதந்திர தினவிழா 140 பேருக்கு நலத்திட்ட உதவி: கலெக்டர் வழங்கல்
திருவாரூரில் மாவட்டத்தில் சுதந்திர தினவிழா 140 பேருக்கு நலத்திட்ட உதவி: கலெக்டர் வழங்கல்
திருவாரூரில் மாவட்டத்தில் சுதந்திர தினவிழா 140 பேருக்கு நலத்திட்ட உதவி: கலெக்டர் வழங்கல்
ADDED : ஆக 16, 2011 02:01 AM
திருவாரூர்: திருவாரூரில் நடந்த 65வது சுதந்திர தினவிழாவில் கலெக்டர் முனியநாதன் தேசிய கொடியை ஏற்றி வைத்து போலீஸாரின் அணி வகுப்பு மரியாதையை ஏற்று கொண்டார்.
தொடர்ந்து தியாகிகளுக்கு பொன்னாடை போர்த்தி கவுரவித்தார். வருவாய்த்துறை, வேளாண்மைத்துறை, சமூக நலத்துறை உட்பட 11 துறைகள் மூலம் 140 பயனாளிகளுக்கு 17 லட்சத்து 60 ஆயிரத்து 300 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.விழாவில், பள்ளி மாணவ, மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. மாவட்ட போலீஸ் எஸ்.பி., சேவியர்தன்ராஜ், டி.ஆர்.ஓ., பொறுப்பு வீரமணி, ஆர்.டி.ஓ., ராமன், உட்பட பலர் பங்கேற்றனர். மேலும் திருவாரூர் தியாகராஜ சுவாமி கோவிலில் நடந்த சமபந்தி விருந்தில் கலெக்டர் முனியநாதன், உதவி ஆணையர் சிவராம்குமர் உட்பட அதிகாரிகள் பங்கேற்னர்.இதேபோல் காகிதகார தெரு, சீதளாதேவி மாரியம்மன் கோவிலும் சமபந்தி விருந்து நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி ஜெயகுமார் மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.* திருத்துறைப்பூண்டி எம்.எல்.ஏ., அலுவலகத்தில் எம்.எல்.ஏ., உலகநாதன், பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்தில் யூனியன் சேர்மன் தமிழ்செல்வி ஆகியோர் தேசிய கொடியை ஏற்றி வைத்தனர். இதில், ஆணையர்கள் வைதேகி, ராஜேந்திரன் மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் செந்தில்நாதன், நகராட்சி அலுவலகத்தில் துணை தலைவர் பாண்டியன், வர்த்த சங்க கட்டிடத்தில் தலைவர் செந்தில்நாதன் ஆகியார் தேசிய கொடியை ஏற்றி வைத்தனர். டெல்டா ரோட்டரி சங்கத்தின் சார்பில் மணி கண் மருத்துவமனையில் தேசிய கொடி ஏற்றப்பட்டு தலைவர் முருகானந்தம் தலைமையில் ரத்ததான முகாம் நடந்தது.நெடும்பலர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் கல்யாணசுந்தரம், தேசிய கொடி ஏற்றி வைத்தார். பள்ளி தலைமையாசிரியர் செல்லத்துரை வாழ்த்தி பேசினார். மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடந்தது.


