/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/மாவுப்பூச்சி தாக்கப்பட்ட வயல்களுக்கு ஒட்டுண்ணி வழங்கல்: கலெக்டர் தகவல்மாவுப்பூச்சி தாக்கப்பட்ட வயல்களுக்கு ஒட்டுண்ணி வழங்கல்: கலெக்டர் தகவல்
மாவுப்பூச்சி தாக்கப்பட்ட வயல்களுக்கு ஒட்டுண்ணி வழங்கல்: கலெக்டர் தகவல்
மாவுப்பூச்சி தாக்கப்பட்ட வயல்களுக்கு ஒட்டுண்ணி வழங்கல்: கலெக்டர் தகவல்
மாவுப்பூச்சி தாக்கப்பட்ட வயல்களுக்கு ஒட்டுண்ணி வழங்கல்: கலெக்டர் தகவல்
நாமக்கல்: 'மாவுப்பூச்சி தாக்கப்பட்ட வயல்களுக்கு, ஒட்டுண்ணிகள் வழங்கப்பட்டுள்ளது' என, மாவட்ட கலெக்டர் குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கை:
விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில், மரவள்ளியில் மாவுப்பூச்சி தாக்குதலைக் கட்டுப்படுத்த வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். அதன்பேரில், 15 யூனியன்களில் மாவுப்பூச்சி தாக்கப்பட்ட மரவள்ளி சாகுபடி விவசாயிகளுக்கு, ஒட்டுண்ணி உற்பத்தி முறை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
அந்த பயிற்சி பெற்ற விவசாயிகள், தங்களது வயலில் உற்பத்தி செய்யும் ஒட்டுண்ணிகளை, அவர்கள் சார்ந்த கிராமத்தில் மற்ற விசாயிகளுக்கு இலவசமாக வழங்க கேட்டுக்கொள்ளப்பட்டது. வேளாண் அறிவியல் நிலையம், லத்துவாடியில், 15 யூனியனைச் சார்ந்த மாவுப்பூச்சி பாதிக்கப்பட்ட மரவள்ளி சாகுபடி விவசாயிகளுக்கு, வயல்களில் விட ஒட்டுண்ணிகள் கொடுக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட வயலுக்கு, 100 ஒட்டுண்ணிகள் விடப்படுகின்றன. ஒட்டுண்ணிகள், மாவுப்பூச்சியின் வளர்ச்சி பருவங்களில் முட்டையிட்டு வளர்ந்து இனப்பெருக்கமடைந்து அழிப்பதால், ஒட்டுண்ணிகள் தானாகவே பெருமளவில் பெருகி மாவுப்பூச்சிகளை அழிக்கும். ஒட்டுண்ணிகள் விடப்பட்ட வயல்களை, தோட்டக்கலை துறை களப்பணியாளர்கள் தொடர்ந்து கண்காணிப்பு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஒட்டுண்ணிகள் அழிந்து விடாமல் அதிக அளவில் பெருக்குவதற்கும், அதை பாதுகாப்பு செய்வதற்கு தேவைப்படும் சூழ்நிலைகள் குறித்தும் ஆலோசனை வழங்கப்படும். எனவே, மரவள்ளி சாகுபடி விவசாயிகள் ஒட்டுண்ணிகள் விடப்பட்ட வயல்களில், ஒட்டுண்ணிகள் வெற்றிகரமாக செயல்பட எந்த களைக்கொல்லி, பூச்சி, நோய்க் கொல்லி மருந்துகளை தெளிக்க வேண்டாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.