/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/உலக தாய்ப்பால் வார விழா சிறந்த மாணவர்களுக்கு பரிசுஉலக தாய்ப்பால் வார விழா சிறந்த மாணவர்களுக்கு பரிசு
உலக தாய்ப்பால் வார விழா சிறந்த மாணவர்களுக்கு பரிசு
உலக தாய்ப்பால் வார விழா சிறந்த மாணவர்களுக்கு பரிசு
உலக தாய்ப்பால் வார விழா சிறந்த மாணவர்களுக்கு பரிசு
ADDED : ஆக 05, 2011 02:46 AM
திருத்தணி : திருத்தணி ஊராட்சி ஒன்றியம் சார்பில், கார்த்திகேயபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் உலக தாய்ப்பால் வார விழா நடந்தது, தலைமை ஆசிரியர் கீதா தலைமை வகித்தார்.முழு சுகாதார திட்ட ஒருங்கிணைப்பாளர் லதா வரவேற்றார்.ஊராட்சி மன்றத் தலைவர் ராஜா விழாவை துவக்கி வைத்தார் .
தொடர்ந்து மாணவர்களிடையே பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.ரோட்டரி சங்கம்: திருத்தணி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரோட்டரி சங்கம் சார்பில், உலக தாய்ப்பால் வார விழா நடந்தது. விழாவிற்கு ரோட்டரி சங்கத் தலைவர் டாக்டர் மோகனன் தலைமை வகித்தார். முன்னாள் ரோட்டரி சங்கத் தலைவர் கோபால் வரவேற்றார். தொடர்ந்து பல்வேறு கேள்விகள் கேட்டு சரியான பதிலளித்த மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.