ADDED : ஆக 04, 2011 02:21 AM
ராசிபுரம்: ராசிபுரம் முத்தாயம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில், தொழில்
முனைவோர் மேம்பாட்டு பயிற்சி மையம் துவக்க விழா நடந்தது.கல்லூரி தாளாளர்
ராமசாமி தலைமை வகித்தார். தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி மைய
ஒருங்கிணைப்பாளர் ஜெகன் வரவேற்றார். கல்லூரிச் செயலாளர் ஜெயப்பிரகாஷ்,
முதல்வர் விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பிரபல தொழில் அதிபரும்,
பயிற்றுனருமான ரெக்ஸ் க்ரிஸ்டி ராஜ் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து
பேசினார்.
நிகழ்ச்சியில், கட்டிடவியல் துறை விரிவுரையாளர் சுருதி, துறைத்தலைவர்கள்,
பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், மாணவ, மாணவியர் உள்பட பலர் பங்கேற்றனர்.